தனியார்துறை போக்குவரத்து நிறுவனங்களின் உரிமையாளர்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு!!

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து துவாக்குடி நோக்கி வரும் அனைத்து நகரப்பேருந்துகளும் கட்டாயமாக கணேசா பேருந்து நிறுத்தத்தில் நிற்கவேண்டும் என்பது போக்குவரத்து சட்டப்படி ஏற்றுக்கொண்ட முறை.
ஆனால் போட்டி மனப்பான்மையில் சில தனியார்துறை பேருந்துகள் திருவெறும்பூர் பேருந்து நிலையத்திலிருந்து கணேசா நிறுத்தத்திற்கு வராமல் நேராக மேம்பாலத்தின் மேலே சென்று பயணிகளை ட்ரெயினிங் சென்டரில் இறக்கி விடுகிறார்கள்.இதனால் கணேசா நிறுத்தத்தில் இறங்கிடவுன்ஷிப் B&C செக்டார்பெல்பூர் திருவேங்கடநகர் ஜெய்நகர்கணபதிநகர் கணேசபுரம் செல்லக்கூடியவர்கள்அங்கிருந்து
ஆட்டோ பிடித்து செல்ல வேண்டிய நிலை இருக்கிறது.ஏழை எளிய மக்கள் பொருளாதாரப் பிரச்னையால் நடந்தே செல்லக்கூடிய சிரமநிலை இருக்கிறது.இதை கவனத்தில் கொண்டு தனியார்துறை பேருந்துகளின் உரிமையாளர்கள், அதிகாரிகள் அந்தந்த பேருந்து ஓட்டுநர் நடத்துனர்களுக்கு அறிவுறுத்துமாறு பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.இந்த அலட்சியப்போக்கு தொடர்ந்தால் பொதுமக்களை திரட்டி
கணேசாவிலோ அல்லது ட்ரெயினிங் சென்டரிலோ போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதையும் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம். என்று தமிழ்நாடு முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் எஸ் செல்வராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய...
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






