அரியமங்கலம் குப்பை கிடங்கில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை 100% 'பயோ மைனிங்' முறையில் மறுசுழற்சி- கே.என் நேரு

திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான அரியமங்கலம் குப்பை கிடங்கில் குவிக்கப்பட்டுள்ள மாநகர குப்பைகளை 100% 'பயோ மைனிங்' முறையில் மறுசுழற்சி செய்யும் பணியை மேற்கொண்டோம்.அதில் பிளாஸ்டிக் கழிவுகளை சிமெண்ட் ஆலைகள் பெற்றுக்கொண்டது மறுசுழற்சி செய்துவந்தன.
தற்போது பிளாஸ்டிக் குப்பைகளின் வரத்து அதிகரிப்பால் சிமெண்ட் அலைகள் அந்த பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மறுத்துவட்டன.எனவே புதிய அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பிளாஸ்டிக் கழிவுகளை சாலை அமைப்பது உள்ளிட்ட மறுசுழற்சிக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்.
அரியமங்கலம் குப்பை கிடங்கில் இருந்து 100 விழுக்காடு குப்பைகள் மறுசுழற்சி செய்யப்பட்டு அகற்றப்பட்டாலும் கூட, அங்கு அடுத்த 15 ஆண்டுகளுக்கு எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






