எஸ்.ஆர்.எம் செவிலியர் கல்லுரியில் 31 வது மண்டல ஆலோசனைக்கூட்டம் மற்றும் போட்டிகள்

12,07,2025 அன்று எஸ்.ஆர்.எம் செவிலியர் கல்லுரியில் 31 வது தமிழ்நடு மாணவ செவிலியர் கூட்டமைப்பின், இந்திய மாணவ செவிலியர் கல்லூரிகளின் மண்டல அளவிலன்னா ஆலோசனைக்கூட்டம் மற்றும் போட்டிகள் நடைபெற்றது.
எஸ்.ஆர்.எம் செவிலியர் கல்லூரியின் தலைமைஆசிரியை டாக்டர் சுஜாசுரேஷ் அவர்களின் வரவேற்புரையில் தொடங்கி வைத்தார்.எஸ்.ஆர்.எம் கல்வி குழுமத்தின் துணை இயக்குனர் டாக்டர். பாலசுப்ரமணியன் மேலும் மாநில அளவிலான செவிலிய மாணவ சங்க ஆலோசகர் டாக்டர்.சுதா அவர்களின் உரையாடல் மற்றும் எஸ்.ஆர்.எம் திருச்சி கல்வி குழுமத்தின் சார்பு துணை வேந்தர் .டாக்டர். சம்ருதீன் கான் அவர்கள்
சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதில் திருச்சி பெரம்பலுர் மேலும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பதினெட்டு செவிலியர் கல்லுரியில் இருந்து செவிலியர் பயிற்சி பள்ளி மாணவ மாணவிகள் முகஓவியம் , மருதாணி வைத்தல், கோலம், படஉருவ போட்டி ,திடீர் உரை ,சிகை அலங்காரம் , குழு நடனம், தனி நடனம் உள்ளிட்ட பதினைந்து வகையான போட்டிகள் நடை பெற்றன.
இதில் துறை சார்ந்த நிபுணர்கள் நடுவர்களாக நியமிக்கப்பட்டு போட்டிகளில் சிறப்பாக பங்கேற்றவர்களை தேர்வு செய்தனர். போட்டிகளில் பங்கேற்றவர்ககளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. எஸ்.ஆர்.எம். செவிலியர் கல்லுரியின் துணை தலைமை ஆசிரியை பேராசிரியர்.தேவி அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய...
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






