தமிழ் இனத்திற்கு பாதுகாப்பு அளித்து தனிச் சட்டம் இயற்ற வேண்டும் - வெள்ளாளர் சங்கங்களின் மாநாட்டில் தீர்மானம்

85 சதவீதம் தமிழ் இனத்திற்கு பாதுகாப்பு அளித்து அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் - திருச்சியில் நடந்த ஒருங்கிணைந்த வேளாளர், வெள்ளாளர் சங்கங்களின் மாநாட்டில் தீர்மானம்ஒருங்கிணைந்த வேளாளர், வெள்ளாளர் சங்கங்களின் இணை எழுச்சி மாநாடு திருச்சி பொன்மலையில் உள்ள ஜி-கார்னர் மைதானத்தில் நடைபெற்றது.
மாநாட்டில் வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனம் மற்றும் வேந்தர் டாக்டர்.ஐசரிகணேசன்,பெஸ்ட் ராமசாமி,மருத்துவர் செந்தில், வ உ சி பேரன் சிதம்பரம்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் வேளாளர் சங்க வரலாற்று நூலை ஐசரி கணேஷ் வெளியிட்டார் அதனை மருத்துவர் செந்தில் பெற்றுக் கொண்டார்.தொடர்ந்து மாநாட்டில் 40க்கும் மேற்பட்ட உட்பிரிவுகளாக தமிழகத்தில் வாழும் இரண்டரை கோடி வேளாளர் உட்பிரிவுகளையும் ஒரே பேரில் வேளாளர் என குறிப்பிட்டு அவரவர் உட்பிரிவு சாதிப் பெயர்களை இணைத்து அரசாணையை வழங்க வேண்டும் அதாவது சோழிய வேளாளர் என்றால் வேளாளர் சோழியர், வேளாளர் காத்தார், வேளாளர் சைவகம் என்பதாக வழங்க வேண்டும்,
மேலும் வேளாளர் சாதியின் உட்பிரிவில் சில உட்பிரிவு பட்டியலில் இடம் பெறாமல் இருக்கிற ஆறுநாட்டு வேளாளர் மற்றும் திருநீற்று வேளாளர் இவர்களை இணைத்து அரசு இதழ் பட்டியலில் வெளியிட வேண்டும்.முற்பட்ட பிரிவில் உள்ள உட்பிரிவு வேளாளர்களுக்கு அரசு சலுகைகள் கிடைப்பதில்லை, ஆகையால் 40உட்பிரிவு வேளாளர்களையும் பிற்பட்ட வகுப்பு பட்டியலில் சேர்த்து கல்வி, வேலை வாய்ப்புகளில் 18சதவீதம் முன்னுரிமை அளிக்க வேண்டும்,
பிற சமுதாயத்திற்கு இருப்பது போல் தமிழகத்தில் பெருவாரியாக வாழும் இரண்டரை கோடி வேளாளருக்கு தனி நலவாரியம் அமைத்திட வேண்டும்,
தமிழகத்தில் உள்ள வேளாளர் குல தெய்வ கோவில்களில் அரசின் தலையிட்டு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன நமது பாரம்பரியமாக அந்தந்த சாதிக்குரிய கோவில்களில் வழிபாட்டு உரிமைகளை அந்தந்த சாதியினர் இழந்து வருகின்றனர் அவர்களின் வழிபாட்டு முறை என்பது மரபுவழி உரிமையாகும் நமது குல தெய்வக் கோயில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து நீக்கி கோயில்களை சாதியின் பெயர்களிலேயே அந்தந்த சமூகங்கள் வழிபட்டை பட்டா வழங்க வேண்டும்,
தமிழ்நாட்டில் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டு பூர்வகுடி தமிழ் மக்களுக்கு பிற மாநிலங்களில் இருந்து இருப்பது போல் 85 சதவீதம் தமிழ் இனத்திற்கு பாதுகாப்பு அளித்து அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் இது அனைத்து தமிழ் மக்கள் பயன் பெறுவார்கள்,அரசியல்வாதிகள் அரசியல் செய்வதற்காக மக்கள் சமூக அடையாளங்களில் தலையிடுவதை வேளாளர் இனம் என்றென்றும் ஒப்புக் கொள்ளாது.
வன்கொடுமை சட்டத்தின் கல்வி நிலையங்களிலும், வேலை வாய்ப்பு இடங்களிலும் பொது இடங்களிலும் பெரும்பாலும் இச்சட்டம் தவறாகவே பயன்படுத்தி ஒற்றுமையை பிளவுபடுத்துமாறு நடந்து கொண்டிருப்பதால் இந்தச் சட்டத்தை கடுமையாக வெள்ளாளர் இனம் எதிர்கிறது,
வேளாளர் இன மக்கள் தங்கள் பட்டங்கள், முதலியார் பிள்ளை கவுண்டர் என கடந்த காலங்களில் பட்டங்களாக பெயர்கள் போட்டு வந்துள்ளனர், தமிழகத்தில் ஆண்ட அரசுகள் அவ்வாறு பட்டங்களை பல்வேறு வகையில் அளித்துள்ளன இனி வேளாளர்கள் அனைவரும் தங்களது பெயர்களுக்கு பின் பட்டங்களை போட்டு தங்கள் அடையாளத்தை மீட்டெடுக்க வேண்டும், அரசு அங்கீகரிக்க வேண்டும்.
உலகெங்கும் வாழும் வெள்ளாளர் இன மக்கள் கல்வி, வேலை வாய்ப்பு, வேளாண்மை, வணிகம் வாழ்வு மேம்பட நாம் வெள்ளாளர் வங்கி ஒன்றை ஏற்படுத்த வேண்டும் அந்த வங்கியில் ஒவ்வொரு வேளார்களும் தங்கள் பங்களிப்பை தொகையை கொடுத்து அது வேளாளர் மேம்பாட்டுக்காக வழி வகுக்க வேண்டும்,
தமிழகத்தில் வேளாளர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றில் வேளாளர் இளைஞர்களும் மாணவர்களுக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் முன்னுரிமை அளித்தல் வேண்டும்,நமது சமுதாய சொந்தங்கள் பல்வேறு கட்சிகளில் தங்களது பங்கேற்பை கட்சிக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் அதரித்து வந்தாலும் மேற்கொண்ட தீர்மானத்தை நிறைவேற்றும் கட்சிக்கே வருங்காலத்தில் வெள்ளாளர் சமுதாயம் துணை புரியும் என தெரிவித்துக் கொள்கிறோம்
உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
*மாநாட்டில் கலந்து கொண்ட வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனரும், வேந்தருமான டாக்டர்.கே. ஐசரி கணேசன் பேசுகையில்*
இந்த நேரத்திலே நாம் குறிப்பிட்ட அரசியல் அங்கீகாரம் தவிர நாம் அனைத்து துறைகளிலும் ஆட்சி செய்து வருகிறோம்.
கல்வி, வேலை வாய்ப்பு இருக்கட்டும் அனைத்து துறையிலும் கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர்கள் நாம்
இந்த நேரத்தில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
எப்பொழுது நாம் நினைக்கின்ற ஆட்சியை உருவாக்கப் போகிறோம் நாம் யாரை காட்டுகிறோமோ அவர்கள் தான் ஆட்சியை நடத்துவார்கள் என்ற நிலைமை முன்பு எல்லாம் இருந்தது இப்போது அது இல்லை மீண்டும் அது வரவேண்டும் அதற்காக நீங்கள் எல்லோரும் தயாராக வேண்டும்.
அனைத்து 44 பிரிவுகளும் ஒன்று சேர்ந்து வேளாளர் இனம் அவர்கள் நினைப்பதுதான் நடக்கும் என்ற நிலைமையை உருவாக்க வேண்டும் அது இந்த திருச்சி மாநாட்டிலே துவங்கி விட்டது என்று தான் நான் சொல்ல விரும்புகிறேன்.
முக்கிய கோரிக்கையாக இந்த மாநாட்டிலே 40க்கும் மேற்பட்ட உட்பிரிவுகளாக தமிழகத்தில் வாழும் இரண்டரை கோடி வேளாளர் மக்களை எடுத்துக்காட்டாக வேளாளர் சோழிய வேளாளர், வேளாளர் கொங்கு வேளாளர், துருவ வேளாளர் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி கல்வி வேலை வாய்ப்பு ஆகியவற்றில் வேளாளர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
நம்முடைய முதல் கோரிக்கை இதை நாம் மத்திய அரசையும் மாநில அரசையும் கேட்டுக்
கொள்கிறேன். இந்த ஒரே ஒரு கோரிக்கையை நாம் நிறைவேற்றிய ஆக வேண்டும் அப்பொழுதுதான் நாம் நமக்காக வாழ முடியும், நம்முடைய இனத்துக்காக வாழ முடியும், நம்முடைய மக்களுக்காக வாழ முடியும் என்பதை எடுத்துக்காட்டு ஆக வேண்டும்.
கல்விக்காக அரும்பாடு பட்டு ஏழை மாணவர்கள் கல்வி கற்க தமிழகத்தில் முதன்முதலாக கல்விக்கூடங்களை நிறுவிய கொடை வள்ளல் பச்சையப்பா முதலியார் அவர்களின் அவர்கள் பெயரில் சென்னை பல்கலைக்கழகத்திற்கு அவருடைய பெயரை சூட்ட வேண்டும், இந்திய விடுதலைக்காக அரும்பாடு பட்டு தங்களது வாழ்நாளை இந்திய மக்களுக்காக அர்ப்பணித்த பெற்ற செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரப் பிள்ளை மற்றும் கொங்கின் மைந்தன் தீரன் சின்னமலை ஆகியோருக்கு இந்திய பாராளுமன்றத்தில் திருஉருவச் சிலையை வைக்க வேண்டும் என இம்மாநாட்டின் வழியாக மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் வலியுறுத்து கேட்டுக் கொள்ளப்படுகிறது.திருச்சி மாநாடு நம் இனத்தவர்களுக்கு ஒரு திருப்பு மாநாடாக திருப்ப முனையாக அமைய வேண்டும் என உரையாற்றினார்.
What's Your Reaction?






