அரசால் தடை செய்யப்பட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ளபோதை பொருட்கள் பறிமுதல்

திருச்சி திருவெறும்பூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா வைத்திருந்த ஆக்டிங் டிரைவரை திருவெறும்பூர் போலீசார் கைதுசெய்தனர் திருவெறும்பூர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜிக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்
காட்டூர் மஞ்சத்தடல் பாலம் அருகே சந்தேகப்படும்படியாக நின்றவரை பிடித்து விசாரித்த பொழுது திருச்சி தென்னூர் காயிதே மில்லத் தெருவை சேர்ந்தவர் ஹிபி புதின் செரிப் (28)என்றும் இவன் ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்து வருவதாகவும் இந்நிலையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா வைத்து இருந்தபோது போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து குட்கா பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்து பார்த்த போது ஹான்ஸ்40 கிலோ, கூலீப் 10 கிலோ, விமல் பாக்கு 11 கிலோ என மொத்தம் 61 கிலோ
ஆகும் இதன் மதிப்பு சுமார் ரூ ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஆகும் அதன் அடிப்படையில் ஹிபிபுதின் செரிப்பை கைது செய்ததோடு வழக்கு பதிவு செய்து ஹிபிபுதின் செரிப்பைதிருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய...
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






