Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி ஐஜி பங்களா எதிரே காதலன், காதலி சண்டை கொடூரத்தில் முடிந்த நிகழ்வு

சிவகங்கை அடுத்த பரமக்குடி சாலக்குடி சேர்ந்த அமலா வெர்ஜினா, முத்து விஜயா புரத்தை சேர்ந்த வியாகுல நவீன்(23) இருவரும் கடந்த மூன்று வருடமாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தூய வளனார்,மற்றும் புனித சிலுவை கல்லூரியில் பயின்று வந்துள்ளனர். இருவரும் பேருந்தில் செல்லும் பொழுது நட்பு காதலாக மாறி உள்ளது. பின்பு அமலா(23) வெர்ஜினா ஒமேகா நிறுவனத்தில் பணிபுரிந்து

வருகிறார். சமீப காலமாக வியாகுல நவீனை சந்திப்பதில் அமலா மறுத்துள்ளர். மேலும் உன்னிடம் கார் இருக்கிறதா இருசக்கர வாகனம் உள்ளதா என்றெல்லாம் அவரிடம் கேட்டுள்ளார். இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று(17.05.2026) திருச்சி ரேஸ் கோர்ஸ் சாலையில் ஐஜி பங்களா எதிரே நடை பாதையில் உள்ள பூங்காவில் இருவரும் அமர்ந்து பேசும் பொழுது சண்டை ஏற்பட்டுள்ளது. நவீன் அமலா வெர்ஜினாவை அவர் அணிந்து வந்த துப்பட்டாவை தன் கையால் கழுத்தை நெரித்து உள்ளார்.

மயக்கம் அடைந்த அமலா கீழே விழுந்து கிடந்துள்ளார். மீண்டும் அவருக்கு உயிர் இருக்கிறதா என்று பார்த்த நவீன் அருகில் இருந்த கல்லை எடுத்து அவர் முகத்தில் கொடூரமாக தாக்க துவங்கியுள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை பிடிக்க முற்பட்டுள்ளனர். சத்தம் அதிகமானதால் ஐஜி பங்களாவில் இருந்த காவல்துறையினரும் ஓடி வந்து அவனை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். உடனடியாக அமலாவை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தற்பொழுது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை

பெற்று வருகிறார். நவீனை கேகே நகர் காவல் துறையினர் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிந்துள்ளது. பட்டப்பகலில் காதலித்த பெண் ஏமாற்றியதால் மனம் உடைந்த காதலன் கொடூர செயலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *