தமிழ்நாடு ஏஐடியுசி கட்டட தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளைச் செயலாளர் கூட்டம் ஜூன் 4 பெரிய மிளகுபாறை மாவட்ட அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் எம். ஆர். முருகன் தலைமையில் நடைபெற்றது.மாநிலத் துணைத் தலைவர் க.சுரேஷ் மாநிலச் செயலாளர்

திண்டுக்கல் பாலன் ஆகியோர் மாநில நிர்வாகக்குழு முடிவுகள் குறித்து எடுத்துரைத்தனர் .மாவட்டச் செயலாளர் சி. செல்வகுமார் வேலை அறிக்கை முன்வைத்து உரையாற்றினார்.
கூட்டத்தில் துணை தலைவர் முத்துலட்சுமி. துரைராஜ் மாவட்ட துணை செயலாளர்கள் மருதாம்பாள்,சுமதி இருதயசாமி மாவட்ட பொருளாளர் பழனியப்பன் மற்றும் மணவை அருள் ஆரோக்கியம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
கீழ்கண்ட முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

2026 ஜூலை மாதத்திற்குள் கிளை மாநாடுகளை நடத்தி முடிக்கவும் செப்டம்பர் மாதத்திற்குள் மாவட்ட மாநாடு நடத்தி முடிக்கவும் முடிவு செய்யப்பட்டது .
ஜூன் 28 இல் திருச்சியில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது

தமிழக அரசு கட்டுமான தொழிலாளர்களுக்கு நிறைவேற்றப்பட்ட ஓய்வூதியம் ரூ2000 வழங்கிட ஏற்கனவே வாரியத்தில் நிறைவேற்றப்பட்ட முடிவினை அமல்படுத்த வேண்டும் .
வாரியத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டத்திற்கு 10 லட்சம் ஆக நிதியினை அதிகப்படுத்தி வழங்க வேண்டும் .

கடந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட வருடத்திற்கு 10,000என்கிற அடிப்படையில் ஐம்பதாயிரம் வீடுகள்அல்லதுவீட்டு மனை வைத்திருப்போர் கட்டிக்கொள்ள நிதி ஒதுக்கீடு என்கிற திட்டத்தை புதிதாக பொறுப்பேற்ற அரசு முழுமையாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav




Comments