17 வயதில் மேஜிசியன்!பயிற்சியாளரே இல்லாமல் மேஜிக்கை அசத்தும் திருச்சி மாணவன்!

17 வயதில் மேஜிசியன்!பயிற்சியாளரே இல்லாமல் மேஜிக்கை அசத்தும் திருச்சி மாணவன்!

ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு திறமைகள் ஒளிந்து கொண்டுதான் இருக்கின்றன. அதனை கண்டறிவது நம் கையில்தான் உள்ளது. உன்னை அறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் என்பதைப்போல தான் இந்த உலகத்தில் போராட ஏதேனும் ஒரு முயற்சி நம்மிடம் இருக்க வேண்டும். ஆச்சரியப்படுத்தும் மேஜிக்கை பிடிக்காதவர்கள் யாருமில்லை! அப்படிப்பட்ட மேஜிக்கை பல இடங்களில் செய்துவரும் திருச்சி மாணவனை பற்றிய சிறப்பு தொகுப்பு தான் இது!

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையை சேர்ந்தவர் அக்ஷய். பெற்றோர் அருணகிரி மற்றும் சுகந்தி ஆவார். இவர்தான் ஆச்சரியப்படுத்தும் மேஜிக்கை ஆச்சரியப்படுத்தும் வயதில் செய்து பல்வேறு விதமான பரிசுகளையும் சில நாடுகளுக்கும் சென்று தன்னுடைய மேஜிக்கினால் பலரை மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.திருச்சி தேசியக் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு ஆங்கிலத்துறை படித்து வருகிறார்.

மேஜிசியன் அக்ஷய்

திருச்சியில் பள்ளிகள், கல்லூரிகள், ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட் மற்றும் பல நிகழ்வுகளில் அக்ஷயின் மேஜிக்குகள் அரங்கேறி வருகின்றன.பத்துக்கும் மேற்பட்ட மேஜிக் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளார். கோவாவில் நடைபெற்ற YAM மேஜிக் போட்டியில் குளோஸ் அப் மேஜிக் பிரிவில் இரண்டாம் பரிசினையும் பெற்றுள்ளார்.தன்னுடைய மேஜிக் நிகழ்வை தாய்லாந்திலும் சென்று அரங்கேற்றியுள்ளார். கோடை விடுமுறை நாட்களில் தான் கற்றுக்கொண்ட மேஜிக்கினை பள்ளி சிறுவர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறார்.

Advertisement

இதுகுறித்து அக்ஷய் அவர்களிடம் பேசியபோது "மேஜிக் என்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கிப்ட். கடின முயற்சியும் பயிற்சியும் சேர்ந்து இதை நான் செய்து வருகிறேன். சிறுவயதில் டீவி சேனல்களில் வரும் கார்டூன்களை பார்த்து இவர்கள் எப்படி இவ்வாறு மேஜிக் செய்கிறாகள் என்பதை யோசித்தேன்.பின்னர் நானும் அவர்களைப்போல் மேஜிக் செய்ய வேண்டும் என்று எண்ணி இரண்டாம் வகுப்பு முதல் சிறு சிறு முயற்சி செய்து இறுதியில் மேஜிக் என்னவென்று உணந்து கற்றுக்கொண்டேன். மேஜிக்கை யாரிடாமும் நான் கற்றுக்கொள்ளவில்லை. நானே எனக்கு ஊக்கம் தந்து மேஜிக்கை கற்றுக்கொள்ள முயன்றேன்.நிச்சயமாக மேஜிக் நிகழும் என்று என்னினேன் அதேப்போல் நடந்தது.மேஜிக் வாழ்க்கையில் மேடை ஏறும் போட்டியில் நான் என் 17 வதிலேயே வெற்றிப்பெற்றேன். என் மேஜிக் வாழ்க்கையில் எனக்கு முன்னுதாரணம்"David Copperfield "என்பவரே ஆவார்.என் வாழ்க்கையே என்னுடைய மேஜிக் தான்.எனக்கு ஒரு அடயாளத்தை குடுத்ததும் அதுவே.

சில மக்கள் மேஜிக்கை பொய் என்றுக்கூறினார்கள் அது ஏன் என்று எனக்கு புரியவில்லை.மேஜிக் செய்யும்பொழுது சந்தேகம் வராதவாறு செய்யவேண்டும்.நாம் செய்யும் மேஜிக்கில் உண்மை இருக்க வேண்டும்.அவ்வாறு இருந்தால் மேஜிக் மீதும் மேஜிசியன் மீதும் என்றும் சந்தேகங்கள் வாராது. என்கிறார் மேஜிசியன் அக்ஷய்.

மேஜிசியன் அக்ஷய் வாழ்க்கையில் மேஜிக் நடந்தது போல நம்முடைய வாழ்விலும் மேஜிக் நடக்க நம்முடைய திறமைகளை வெளிக்கொணர்வதே சிறந்த வழியாக இருக்கும்.

✒சாருலதா கோகிலதாசன்
(பயிற்சி பத்திரிகையாளர்)