கோடைக்காலத்திற்கான தயார்நிலை,
அதிகாரப்பூர்வ வானிலை எச்சரிக்கைகள் மற்றும் TN Alert மொபைல் செயலி மூலம் தொடர்ந்து கவனிக்கவும்.
திரைச்சீலைகள், சூரிய ஒளி மறைப்புகள், காற்றோட்டம் மற்றும் பிரதிபலிப்பான்களை பயன்படுத்தி உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருங்கள்.
ORS, குடிநீர் மற்றும் அத்தியாவசிய மருந்துகளை சேமித்து வைக்கவும்.
காலை அல்லது மாலை நேரங்களில் வெளிப்புற வேலை, பயணம் மற்றும் பள்ளி நடவடிக்கைகளைத் திட்டமிடுங்கள்.
வெளிர் நிற, தளர்வான பருத்தி ஆடைகளை அணியுங்கள்.

வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தைகள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களின் நலனில் கவனம் செலுத்தவும்.
செல்லப்பிராணிகள் மற்றும் கால்நடைகளுக்கு போதுமான நிழல் மற்றும் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யவும்.
இலைகள், குப்பை அல்லது விவசாயக் கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்கவும்.
வீடுகள், மொட்டை மாடிகள் மற்றும் தெருக்களைச் சுற்றி முடிந்தவரை செடிகள், மரங்கள் வளர்த்து பசுமை சூழல் நிறைந்த இடமாக பராமரிக்கவும்.
மதியம் 12.00 மணி முதல் 3.00 மணி வரை வெப்பநிலை உச்சத்தில் இருக்கும்போது வெளியே செல்வதைத் தவிர்க்கவும்.
தாகம் இல்லாவிட்டாலும் நிறைய தண்ணீர் குடிக்கவும்.
நீர்ச்சத்துடன் இருக்க ORS, மோர், லஸ்ஸி, எலுமிச்சை சாறு அல்லது இளநீர் பயன்படுத்தவும்.

திரவக் கட்டுப்பாடுள்ள உணவுமுறையைப் பின்பற்றுபவர்கள், நீர்ச்சத்துள்ள உணவினை அதிகரிப்பதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும்.
வெளியில் செல்லும்போது உங்கள் தலையை துணி, தொப்பி அல்லது குடையால் மறைத்து கொள்ளவும், சன்ஸ்கிரீன் மற்றும் சன்கிளாஸ்களைப் பயன்படுத்துங்கள்.
வசிப்பிடத்தின் உட்புறத்தை நன்கு காற்றோட்டமாக வைத்திருங்கள்; முடிந்தால் கீழ் தளங்களில் தங்கவும்.
திறந்த வெளியில் வேலை செய்ய வேண்டியிருந்தால் அடிக்கடி இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள்.
நிறுத்தப்பட்ட வாகனங்களுக்குள் குழந்தைகள், முதியவர்கள் அல்லது செல்லப்பிராணிகளை ஒருபோதும் விட்டுச் செல்லாதீர்கள்.

கடுமையான பணிகள், நீண்ட நடைப்பயிற்சி அல்லது நேரடி சூரிய ஒளியில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கவும்.
சூடான பரப்புகளில் வெறுங்காலுடன் நடப்பதைத் தவிர்க்கவும்.
எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவை உண்ணுங்கள், மது, காஃபின் மற்றும் நீரிழப்பு ஏற்படுத்தும் பானங்களைத் தவிர்க்கவும்.
உங்கள் அண்டை வீட்டார் மற்றும் வெளிப்புற வேலை செய்பவர்களின் நலனையும் கண்காணிக்கவும்.
பணியாளர் மற்றும் வெளிப்புற தொழிலாளர்களுக்கு சுத்தமான குடிநீர், நிழல் மற்றும் ஓய்வு இடைவெளி வழங்கப்பட வேண்டும்.

பணியிடங்களில் ORS, மோர், முதலுதவி பெட்டி, ஐஸ் ஒத்தடப் பைகள் ஆகியவற்றை வைத்திருங்கள்.
வெப்பம் அதிகமில்லாத அதிகாலை அல்லது மாலையில் கடுமையான வேலைகளைத் திட்டமிடுங்கள்.
அதிக வெப்பத்தின் போது தொழிலாளர்கள் அடிக்கடி ஓய்வு எடுக்க அனுமதிக்கவும்.
புதிய தொழிலாளர்கள் வெப்பத்திற்கு பழக்கப்படும் வரை அவர்களுக்கு இலகுவான பணிகளை ஒதுக்குங்கள்.
கர்ப்பிணிகள் மற்றும் மருத்துவ குறைபாடுள்ளவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
வெப்ப அலை எச்சரிக்கைகளை தொழிலாளர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கவும்.
வெப்ப அலையின் தாக்கத்தினை தணித்திட வீடுகள் மற்றும் கட்டிடங்களில் பிரதிபலிப்பு கூரை பெயிண்ட் பயன்படுத்தவும் அல்லது குளிர் கூரை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள்.
சன்னல் பிரதிபலிப்பான்களை நிறுவவும்.

சூரிய ஒளியைத் தடுக்க அடர் வண்ண திரைச்சீலைகள், கண்ணாடி அல்லது மூங்கில் திரைச்சீலைகளைப் பயன்படுத்தவும்.
இரவில் வெப்பநிலை குறையும் போது காற்றோட்டத்தினை உண்டாக்குங்கள்.
வீட்டை இயற்கையாகவே குளிர்விக்க உட்புற தாவரங்கள் அல்லது கூரை தாவரங்களை வளர்க்கவும்.
மின்சாரத்தைச் சேமிக்கவும் வெப்பச் சுமையைக் குறைக்கவும் குளிர்சாதன வெப்பநிலையை 24°C அல்லது அதற்கு மேல் பராமரிக்கவும்.
கால்நடைகளை நிழலான இடங்களில் வைத்து, குளிர்ந்த, சுத்தமான தண்ணீரை வழங்குங்கள்.
காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை அவற்றை வேலை செய்ய வைக்காதீர்கள்.
ஓலைக்கூரை, மண்பூச்சு, வெப்பம் தணிக்கும் வெள்ளை பெயிண்ட் மற்றும் நீர்தெளிப்பான் ஆகியவற்றை பயன்படுத்தி கால்நடை கொட்டகையினை குளிர்விக்கவும்.
கால்நடை கொட்டகைகளில் மின்விசிறிகள், அல்லது தண்ணீர் தெளிப்பான்களைப் பயன்படுத்துங்கள்.
அதிக வெப்பத்தின் போது, விலங்குகளின் மீது தண்ணீரை தெளிக்கவும் அல்லது பாதுகாப்பான நீர்நிலைகளில் குளிர்விக்கவும்.

பசுந்தீவனம், கனிம கலவைகள் மற்றும் உப்பு ஆகியவற்றை வழங்கவும்.
வெம்மை குறைந்த நேரங்களில் மேய்ச்சலுக்கு அனுப்பவும்.
அவசர உதவிக்கு:
மாநில அவசர கட்டுப்பாட்டு அறை: 1070
மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை: 1077
வெளியிடுவோர்:
தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை,
வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்,
எழிலகம், சேப்பாக்கம், சென்னை-600 005.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments