தமிழ்நாடு முழுக்க 2026 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் அனைத்துக் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர். இம்முறை புதிதாக நடிகர் விஜயின் தவெக கட்சி ஒரு புதிய போட்டியை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை உள்ள காலகட்டங்களில் அரசியலை கல்லூரி மாணவர்கள் முதல் இல்லத்தரசிகள், முதியவர், ஆண்கள் பெண்கள் தேர்தல் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அரசியலை பேசி உள்ளனர்.

ஆனால் இம்முறை பள்ளி பயிலும் குழந்தைகள், சிறுவர்கள் அரசியல் பேச துவங்கியுள்ளனர். இதில் அவர்களுக்கு அரசியல் புரிதல் இருக்குமா என்பதை விட. அரசியல் பற்றி தெரிந்து கொள்வதாக இருக்கட்டும். யாருக்கு ஓட்டு போட வேண்டும் எந்த கட்சி எந்த வேட்பாளர் எந்த சின்னத்தில் போட்டியிடுகிறார் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தியது விஜயின் தமிழக வெற்றி கழகத்தையே சாரும்.
பள்ளி மாணவர்கள் மாணவிகள் குழந்தைகள் இவர்களுக்கு ஓட்டுரிமை இல்லை என்றாலும்,

அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தாத்தா பாட்டி பெற்றோர்கள் என்று அவர்களது பாசத்தால் கட்டிப் போடப்பட்ட உறவினர்களை விஜய் கட்சியான தவெகவிற்க்கு வாக்கு செலுத்துமாறு வலியுறுத்துகின்றனர். சில குழந்தைகள் அவர்களது தாத்தா பாட்டிகளை சத்தியம் வாங்கும் அளவுக்கு அரசியலை குழந்தைகளிடம் கொண்டு சேர்த்துள்ளார் விஜய். எனவே கண்டிப்பாக இம்முறை இதற்கான ஒரு மாறுபட்ட தேர்தலை அனைத்துக் கட்சிகளும் சந்திக்கும் என்பது உண்மை.

பள்ளிக்கூடங்களில் மற்றும் விளையாடும் இடங்களில் கூட TVK கட்சிக்கு ஓட்டு கேட்கும் அளவுக்கு கொண்டு சேர்த்துள்ளது இம்முறை தேர்தல். அதேபோல் பெற்றோர்களும் அவர்களது தாத்தா பாட்டி போன்ற உறவினர்களும் குழந்தைகள் மறுப்பு தெரிவிக்க முடியாத அளவிற்கு அவர்களது பாசம் கலந்த தேர்தல் பிரச்சாரம் இப்போது பரவலாக இருக்கிறது. இருப்பினும் அரசியலில் வாக்கு செலுத்தும் வரை முடிவு வரும் வரை எதையும் முழுமையாக கணிக்க முடியாது காத்திருப்போம் களத்தில்.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Instagram*
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav
தவெகவிற்க்கு தாறுமாறாக ஓட்டு வாங்கி தரும் மழலைகள்



Comments