Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

கால்நடைகளுக்கு டிஜிட்டல் ஐடி கட்டாயம்: திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

மத்திய அரசின் தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டம்
NDLM தமிழ்நாடு முழுவதும்
மாவட்டத்திலும் இப்பணி மாடு, எருமை என அனைத்து
செயல்படுத்தப்பட்டு
வருகிறது. திருச்சிராப்பள்ளி
விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி, இனம் வாரியாக
கால்நடைகளின் காதில் 12 இலக்க எண் கொண்ட டிஜிட்டல் டேக்

பொருத்தப்படும். இது கால்நடையின் ஆதார் அட்டை போன்றது.
கால்நடை பராமரிப்புத்துறை ஊழியர்கள் மாவட்டத்தின் அனைத்து கிராமங்களுக்கு நேரில்
சென்று பதிவு செய்கின்றனர்.
கால்நடையின் இனம், பிறந்த தேதி, வயது, பாலினம், தாய்-
தந்தை விவரம், செயற்கைமுறை கருவூட்டல் விவரம் என அனைத்தும் பதிவாகும்.
அதோடு
அளிக்கப்பட்ட தடுப்பூசிகள், குடற்புழு நீக்கம் செய்த தேதி, நோய் வந்து சிகிச்சை பெற்ற

 


விவரங்கள் வரை முழுமையாக டிஜிட்டல் டேட்டாபேஸில் ஏற்றப்படும்.
உரிமையாளரின்
ஆதார் எண், செல்போன் எண் இணைக்கப்படும். பதிவின் போது செல்போனுக்கு வரும் OTP
எண்ணை கொடுத்தால் மட்டுமே பதிவு முடிவடையும். இதனால் போலி பதிவுகள்
தடுக்கப்படுகின்றன.
முன்பு கால்நடையை விற்கவோ வாங்கவோ சென்றால், அதன் வயது, பால் கறக்கும் திறன்,
நோய் வரலாறு எதுவும் தெரியாது.
இனி 12 இலக்க எண்ணை ஸ்கேன் செய்தால் போதும்.
கால்நடையின் முழு பயோடேட்டா’ திரையில் வந்துவிடும்.
வங்கி கடன், அரசு மானியம்,
காப்பீடு பெறவும் இந்த டிஜிட்டல் ஐடி கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது.
66


கால்நடைகளுக்கு திடீர் நோய் வந்தால் மருத்துவரை தேடி அலைய வேண்டாம். தமிழ்நாடு
அரசின் இலவச நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்
செயல்படுகிறது.
கால்நடைக்கு திடீர் அவசரம் என்றால் 1962 என்ற இலவச எண்ணை தொடர்பு
கொள்ளலாம். உடனே மருத்துவ ஊர்தி விரைந்து வரும்.
கால்நடை பராமரிப்புத்துறை ஊழியர்
ஊருக்கு வரும்போது ஆதார் + ஆக்டிவ் செல்போன் எண்ணை தயாராக வைத்திருக்க வேண்டும்.


கால்நடைகளுக்கு டிஜிட்டல் டேக் பொருத்த ஒத்துழைப்பு தர வேண்டும்.
அவசர மருத்துவத்திற்கு
1962 எண்ணை மனப்பாடம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்
கால்நடை வளம் பெருகவும், விவசாயிகளின் வருமானம் உயரவும் இத்திட்டங்கள் பெரிதும்
உதவும்.
மேலும் விபரங்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை
அலுவலகம் / அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தபிரத்திக் தாயள், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *