Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மாஸ்டர் பட வில்லன நடிகர் போல் குற்ற செயலில் ஈடுபட்ட திமுக ஒன்றிய செயலாளர் கைது – எஸ்.பி அதிரடி

திமுக மணப்பாறை கிழக்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் ஆரோக்கியசாமி.
இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது மிக முக்கியமாக மணல் கொள்ளை கொலை மிரட்டல் விடுவது அடிதடி உள்ளிட்ட வழக்குகள் இருக்கிறது. தொடர்ந்து இவரின் நடவடிக்கைகளை காவல் துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினத்தின் அதிரடி நடவடிக்கையால் ஆரோக்கியசாமி கைதாகியுள்ளார்.

நேற்று காலையே இவர் மணப்பாறை காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார் என தகவல் செய்தியாளர்களுக்கு கிடைத்தது.

மணப்பாறை போலீசார் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அவரது ஆதரவாளர்கள் மற்றும் திமுகவினர் போலீஸ் நிலையத்தில் திரன்டதால் போலீஸ் குவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து என்ன வழக்கு எதற்காக இவர் காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார் என்று காவல்துறையிடம் கேட்ட பொழுது யாரும் வாய் திறக்கவில்லை மிகவும் ரகசியம் காக்கப்பட்டு அவர் மீது போடப்பட்ட வழக்குகளை இரவு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு முன் வெளியிடப்பட்டது.

(Manapparai PS, Cr.No. 187/26 U/S – 296(b),118(1)115(2)351(3)126(2) BNS on 10.04.2026
and then this sections altered into 296(b),118(1)115(2)351(3)126(2) 196(1)(a),196(1)(b)61(2)(b) 49, 192 BNS)

திமுகவில் மணப்பாறை பகுதியில் முக்கிய பிரமுகரான இவருக்கு அமைச்சர்களின் ஆதரவு இருந்து வந்தது.

இதனை பயன்படுத்தி இவர் ஏராளமான குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. யாராவது இவரிடம் கேள்வி எழுப்பினால் மாஸ்டர் படத்தில் வில்லன் நடிகராக செய்யும் பார்முலாவை கையில் எடுத்து சிறார்கள் வைத்து மிரட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தார். காவல்துறையினர் காத்திருந்து இவர் மீது ஏரராளமான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர். முக்கியமாக காவல் நிலையத்தின் வெளியே ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ வேட்பாளர் துரைராஜ் இவருக்காக காவல்துறையிடம் பேச நீண்ட நேரம் காரில் காத்திருந்தார். சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு முடிந்த நிலையில் ஆரோக்கியசாமி கைது செய்யப்பட்ட சம்பவம் திமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடிதடி வழக்கில் அவரை கைது செய்து மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *