தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருச்சிராப்பள்ளி மண்டல அலுவலகத்தில் போக்குவரத்து துறை அரசு முதன்மை செயலாளர் சுன் சோங்கம் ஜடக் சிரு இ, ஆ,ப, தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று 25/04/2026 நடைபெற்றது.
இவ் ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்( லிட்) திருச்சி மண்டல அலுவலகத்தில் சட்டமன்றத்பெது தேர்தலை முன்னிட்டு தேர்தல் அன்று வாக்களித்துவிட்டு பஞ்சபூர். கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திலிருந்து சென்னை,கோவை மற்றும் பிற ஊர்களுக்கு மணிக்கு செல்லும் பொது மக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்து வசதிகள் குறித்து போக்குவரத்து துறை அரசு முதன்மை செயலாளர் அவர்கள் போக்குவரத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் பண்டிகை காலங்களில்,தொடர் விடுமுறை காலங்களில், பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கவும் பயணிகளின் நெரிசலை, தவிர்க்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனபோக்குவரத்து துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
ஆய்வு கூட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் நிர்வாக இயக்குனர் திரு க. தசதரன், அவர்கள், மதுரை கோட்டம் நிர்வாக இயக்குனர் சரவணன் , துணை ஆணையர் போக்குவரத்து மாதவன் , தலைமை நிதி அலுவலர் சந்தானகிருஷ்ணன், திருச்சி மண்டல பொது மேலாளர் டி. சதீஷ்குமார் , பொது மேலர்கள் திரு. சிங்காரவேலன்(
தொழில்நுட்பம்) ரங்கராஜன்( மனிதவளம் ) வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சுரேஷ் பாபு (ஸ்ரீரங்கம்) சரவணபவன்( அரியலூர் ) மற்றும் போக்குவரத்து துறை சார்ந்த அலுவலர்கள் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உட்பட பலர் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments