திருச்சியில் முன்னாள் எம்பி தவெகவில் இணைகிறாரா
அனுப்புநர்.,
M.A.,M.L, EX.M.P.
கழக கொள்கை பரப்பு துணை செயலாளர்.
பெறுநர்.
திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள், அ.தி.மு.க பொது செயலாளர்.
திருச்சி ஆ.இளவரசன் எனும் நான், 1983ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை புரட்சித் தலைவர் M. G. R, புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களுடைய ஆசியால் கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் விசுவாச மிக்க தொண்டனாக பணியாற்றி இருக்கிறேன்.கடந்த 42 ஆண்டுகளாக எந்த சூழ்நிலையிலும் கட்சியும் மாறவில்லை, கட்சி பிளவுபட்ட போதும் அணியும் மாறவில்லை.அம்மா அவர்களின் மறைவுக்கு பிறகு, கழகம் தங்கள் தலைமையில் துடுப்பு இல்லாத படகைப் போல் அல்லாடுவதைக் கண்டு கண்ணீர் விடும் லட்சக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவன். அம்மா அவர்களின் மறைவிற்குப் பிறகு மிகுந்த நம்பிக்கையுடன் கழகத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு உங்களை தேர்ந்தெடுத்தோம். ஆனால் கழகத் தொண்டர்களின் நம்பிக்கை நிலைக்குலைந்து போகும் அளவிற்கு கழகத்தில் தாங்கள் எடுத்த நடவடிக்கைகள் இருந்தன.

அம்மா மறைவிற்கு பிறகு அனைத்து தேர்தல்களிலும் உழைப்பிற்கும் விசுவாசத்திற்கும் இடமில்லாமல் போனது. புதியவர்களும் பணத்திற்கும் மட்டுமே பிரதான இடம் பெற்றிருந்தது. இதன் காரணமாகவே கழகம் தொடர்ந்து பதினொரு முறை தோல்விகளை சந்தித்தது.முக்கியமாகத் தோல்விக்கான காரணத்தையும் ஆராயவில்லை. பொதுச் செயலாளர் என்ற முறையில் தோல்விக்கு பொறுப்பேற்கவும் மறந்துவிட்டீர். மூத்த நிர்வாகிகளின் ஆலோசனைகளையும் புறந்தள்ளிவிட்டீர். அதைவிட கொடுமை, கழகத்தின் எதிர்கட்சியான திராவிட முன்னேற்றக்கழகத்தின் ஆதரவோடு முதலமைச்சராகுவதற்கும் துணிந்துவிட்டீர்.
எனவே கழகக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பிலிருந்தும், அ.தி.மு.க அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் மிகுந்த மனவேதனையோடு வெளியேறுகிறேன். அ.தி.மு.க வில் நான் வகித்த பொறுப்புகள்.:

1. 1993 . திருச்சி ஒன்றுபட்ட கழக இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் – 1983 முதல்
2. ஜெயலலிதா, பேரவை மாவட்டச் செயலாளர், ( பெரம்பலூர் மாவட்டம்)
3. ஜெயலலிதா, பேரவை மாநில இணைச் செயலாளர்.
4. கழக மாநில மாணவரணி செயலாளர்.
5. ஜெயலலிதா, பேரவை மாநிலச் செயலாளர்.
6. கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்.
7. அனைத்துலக M. G. R மன்ற மாநிலத் தலைவர்.
8. அனைத்துலக M. G. R மன்ற மாநில இணைச் செயலாளர்.
9. 1989 மற்றும் 1996 ஆம் ஆண்டு சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்டேன்-(ஆண்டிமடம் மற்றும் அரியலூர் தொகுதிகள்)
10. பாராளுமன்ற மேலவை உறுப்பினர் – 2007 முதல் 2013 வரை
11. பாராளுமன்ற மேலவை அ.தி.மு.க கொறடா.
12. கழகக் கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர்.

மக்களுக்காக கழகம் நடத்திய போராட்டங்களில் கலந்துகொண்டு பதினான்கு முறை சிறை சென்றுள்ளேன்.அ.தி.மு.க வில் நான் வகித்த பொறுப்புகள்:
1. 1993 . திருச்சி ஒன்றுபட்ட கழக இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் – 1983 முதல்
2. ஜெயலலிதா, பேரவை மாவட்டச் செயலாளர், ( பெரம்பலூர் மாவட்டம்)
3. ஜெயலலிதா, பேரவை மாநில இணைச் செயலாளர்.
4. கழக மாநில மாணவரணி செயலாளர்.
5. ஜெயலலிதா, பேரவை மாநிலச் செயலாளர்.
6. கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்.
7. அனைத்துலக M. G. R மன்ற மாநிலத் தலைவர்.
8. அனைத்துலக M. G. R மன்ற மாநில இணைச் செயலாளர்.
9. 1989 மற்றும் 1996 ஆம் ஆண்டு சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்டேன்-(ஆண்டிமடம் மற்றும் அரியலூர் தொகுதிகள்)
10. பாராளுமன்ற மேலவை உறுப்பினர் – 2007 முதல் 2013 வரை
11. பாராளுமன்ற மேலவை அ.தி.மு.க கொறடா.
12. கழகக் கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர்.
மக்களுக்காக கழகம் நடத்திய போராட்டங்களில் கலந்துகொண்டு பதினான்கு முறை சிறை சென்றுள்ளேன்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments