திருச்சி என்றால் அரசியலில் அனைவருக்கும் திருப்புமுனை ஏற்படுத்தும் என்பார்கள் அதற்கு ஏற்ப ஒரு காலத்தில் அதிமுகவின் கோட்டையாக இருந்த திருச்சியில் தற்பொழுது சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கூடாரமே காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது கட்சியை தோற்றுவித்த எம்.ஜி ஆர் அவர்கள் காலத்தில் இருந்தவர்கள் எல்லாம் கட்சியை விட்டு விலகி செல்லும் காட்சிகள் தினமும் அரங்கேறி கொண்டிருக்கின்றன. மூத்த உறுப்பினர்கள் கட்சியின் பகுதி, வட்டம் ஒன்றியம் என பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது.

7 மாநகர் பகுதி செயலாளர் களில் நான்கு பகுதி செயலாளர் தமிழக வெற்றி கழகத்தில் இதுவரை இணைந்துள்ளனர். இன்று காலை அதிமுகவின் முன்னாள் எம்பி இளவரசன் இபிஎஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்சியிலிருந்து விலகி விட்டார் தொடர்ந்து ஏராளமானோர் கட்சியிலிருந்து விலகப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் திருச்சி கிழக்கு தொகுதியில் 2016 ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்ற வெல்லமண்டி நடராஜன் அமைச்சராக பதிவை வைத்தார் அவரும் தவெகவில் சென்று இணைந்து விட்டார்.
ஒட்டுமொத்தமாக திருச்சி மாநகர், மாவட்ட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர்.இன்னும் ஒன்பது மாத காலத்தில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் திருச்சி அதிமுக கோட்டையில் ஓட்டை விழுந்து சுக்கு நூறாக உடைந்து வருகிறது என ரத்தத்தின் ரத்தங்கள் புலம்பி வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments