Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

அதிமுகவில் இருந்து விலகினார் இளவரசன்

திருச்சி 29 05 2026

இடம்: அண்ணாமலை நகர் திருச்சி

தோல்வியை ஏற்றுக்கொள்ளாத பொதுச் செயலாளருடன் பணியாற்ற விரும்பவில்லை. தமிழக வெற்றி கழகம் பொறுப்பேற்றவுடன் அம்மா உணவகத்தை மேம்படுத்துவேன் என அவர் சொன்னதை நான் முழு மனதோடு வரவேற்பு அதிமுகவின் முக்கிய பிரமுகரான திருச்சி ஆ.இளவரசன் பத்திரிக்கையாளர் சந்திப்புஅதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி ஆ. இளவரசன், திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

பத்தாண்டு காலமாக என்னை புறக்கணித்து விட்டார் என்னை மட்டுமில்லை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்திலிருந்து பணியாற்றி அவர்களை முழுவதுமாக புறக்கணித்து விட்டார்.

முன்னதாக அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திருச்சி ஆ இளவரசன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டார்அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது. 1983 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 42 ஆண்டுகளாக அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் பயணித்து கழகத்திற்காக பாடுபட்டதாகவும்

அம்மா அவர்களின் மறைவுக்குப் பிறகு கழகம் தங்கள் தலைமையில் துடுப்பு இல்லாத படகை போல் தள்ளாடுவதை கண்டு கண்ணீர் விடும் லட்சக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவன்..

அம்மாஅவர்களின் மறைவுக்கு பிறகு மிகுந்த நம்பிக்கையுடன் கழகத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு உங்களை தேர்ந்தெடுத்தோம்ஆனால் கழகத் தொண்டர்களின் நம்பிக்கை நிலைகுலைந்து போகும் அளவிற்கு கழகத்தில் தாங்கள் எடுத்த நடவடிக்கைகள் இருந்தனஅம்மா மறைவிற்குப் பிறகு அனைத்து தேர்தல்களிலும் உழைப்பிற்கும் விசுவாசத்திற்கும் இடமில்லாமல் போனது.

புதியவர்களும், பணத்திற்கும் மட்டுமே பிரதான இடம் பெற்றிருந்ததுஇதன் காரணமாகவே கழகம் தொடர்ந்து 11 முறை தோல்வியை சந்தித்ததுமுக்கியமான தோல்விக்கான காரணத்தையும் ஆராய வில்லை.பொதுச் செயலாளர் என்ற முறையில் தோல்விக்கு பொறுப்பு ஏற்கவும் மறந்து விட்டீர்கள்மூத்த நிர்வாகிகளின் ஆலோசனைகளையும் புறந்தள்ளி விட்டீர்கள்.அதைவிட கொடுமை கழகத்தின் எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவோடு முதலமைச்சர் ஆவதற்கு துணிந்து விட்டீர்கள்எனவே கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் பொறுப்பில் இருந்தும் அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் மிகுந்த வேதனையோடு வெளியேறுகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது

பின்னர்செய்தியாளரிடம்கூறியதாவதுதோல்வியை ஏற்றுக்கொள்ளாத பொதுச் செயலாளருடன் பணியாற்ற விரும்பவில்லை. இந்த இயக்கத்தின் தொடர் தோல்விக்கு எடப்பாடி பழனிச்சாமியினுடைய பிடிவாதமே காரணம்..அதனால் அதிமுகவிலிருந்து விலகுகிறேன்.பத்தாண்டு காலமாக என்னை புறக்கணித்து விட்டார் என்னை மட்டுமில்லை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்திலிருந்து பணியாற்றி அவர்களை முழுவதுமாக புறக்கணித்து விட்டார்.

தொடர்ந்து 11 தோல்வியை சந்தித்துள்ளது ஒவ்வொரு தோல்வி சந்திக்கும்போதும் அவரிடம் யாரேனும் காரணங்களை தெரிவித்தால் உடனடியாக ஒரு கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார்.அவர் எடுப்பது மட்டுமே ஒரே முடிவு என்று நினைத்து செயல்படுகிறார்.

ஜெயலலிதா அவர்களின் விசுவாசிகள் அனைவரையும் ஓரம் கட்டி விட்டு இவருக்கென்று ஒரு கூட்டத்தை சேர்த்துக் கொண்டு இருந்தால் எப்படி வெற்றி பெற முடியும்.அதிமுகவில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறுவது மிகுந்த வேதனை அளிக்கிறது..இப்படி ஒவ்வொருவராக கட்சியிலிருந்து நீக்கினால் எப்படி இந்த கட்சி வளரும்.. நீங்கள் தான் அவரிடம் கேட்கச் சொல்ல வேண்டும்..

மிழக வெற்றி கழகம் பொறுப்பேற்றவுடன் அம்மா உணவகத்தை மேம்படுத்துவேன் என அவர் சொன்னதை நான் முழு மனதோடு வரவேற்கிறேன் எனவும் தெரிவித்தார்ஒன்றரை கோடி தொண்டர்கள் மட்டுமல்ல ஆண்டவனே கூறினாலும் அனைவரையும் நீக்கினாலும், நான்தான் அதிமுக பொதுச்செயலாளர் என்ற மனநிலையுடன் தான் எடப்பாடி இருப்பார்

பேட்டி: திருச்சி ஆ இளவரசன், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அதிமுக

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *