Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

வாக்காளர்களுக்கு உண்மையாக நடந்தேன்; மீண்டும் திமுகவை ஆதரியுங்கள் – திருச்சியில் கே.என்.நேரு பேச்சு!

திருச்சியில் கலைஞர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் நேரு,அதிமுக ஆட்சியில் நான் இருக்கும் மேற்கு தொகுதிக்கு கூட குடிநீர் கிடைக்காத நிலை இருந்தது.

ஐந்து ஆண்டு காலத்தில் முதல்வராக இருந்த ஸ்டாலின் ஏராளமான திட்டங்களை செய்து கொடுத்து இருக்கிறார். திருச்சியில் 100 எம்.எல்.டி கழிவு நீரை சுத்திகரித்து நன்னீராக மாற்றுவதற்கான திட்டங்களை செயல்படுத்தினேன். திமுக தலைவர் ஸ்டாலினை மீண்டும் முதல்வராக அமர வைக்க இந்த கூட்டத்தில் இருந்து பணியை தொடங்குவோம். நான் எந்த தவறும் செய்யவில்லை என்னை பற்றி பத்திரிக்கை,முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.


வாக்களித்த வாக்காளர்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்து கொண்டுள்ளேன். தாய்மார்கள் ஏராளமானோர் இங்கே அமர்ந்து உள்ளீர்கள் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் அது குறித்த விளக்கமாக என்னால் பேச முடியவில்லை.

தமிழ்நாட்டில் விரைவாக உள்ளாட்சித் தேர்தல் முதலில் வரும்.அதன் பிறகு பாராளுமன்றத் தேர்தல் வர இருப்பதால் மீண்டும் திமுக இயக்கத்தை வெற்றி பெற வைத்து
தாய்மார்கள் பெருவாரியான ஆதரவை தர வேண்டும் என கேட்டு கொண்டார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *