திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அக்கட்சியிலிருந்து விலகி, தங்களை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.

திருச்சி கிழக்கு தொகுதி, 17-வது வட்ட அ.தி.மு.க வட்டச் செயலாளர் சிங்கமுத்து தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட அ.தி.மு.கவினர் அக்கட்சியிலிருந்து விலக முடிவு செய்தனர். அதன்படி, அனைவரும் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் தங்களை அதிகாரப்பூர்வமாக தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.
மாற்றுக்கட்சியிலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தவர்களை, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் பொன்னாடை அணிவித்து முறைப்படி வரவேற்றனர்.

இந்த இணைவு விழாவின் போது பின்வரும் தி.மு.க முக்கிய நிர்வாகிகள் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்:
மாநகரக் கழகச் செயலாளர்
மு. மதிவாணன்
பகுதிக் கழகச் செயலாளர்பாபு
வட்டக் கழகச் செயலாளர்கள் மனோகர்
சுப்பிரமணி
மேலும் இந்நிகழ்வில் ஏராளமான தி.மு.க கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments