மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று (மே 3) நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் 12 மையங்களில் 6688 பேர் நீட் தேர்வு எழுத உள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 மையங்கள், தேசிய கல்லூரியில் 4 மையங்கள், மண்ணச்சநல்லூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் – 1, லால்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் – 1, பிஷப் ஹீபர் கல்லூரியில் 2 மையங்கள், தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 மையங்கள் என 12 மையங்களில் இன்று தேர்வு நடைபெற உள்ளது.

தேர்வர்கள் காலை 11 மணி முதல் மதியம் 1:30 மணிக்குள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். அதன் பிறகு வரும் நபர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை அதாவது 3 மணி நேரம் 20 நிமிடம் தேர்வு நடைபெற இருக்கிறது. மேலும் தேர்வர்கள் தண்ணீர் பாட்டில்கள் எடுத்து செல்லலாம். ஆனால், அவை வெளிப்படைத் தன்மையாக அதாவது ஒளிபுகும் தன்மையுடன் (டிரான்ஸ்பரன்ட்) இருக்க வேண்டும். தேர்வர்கள் மத நம்பிக்கை சார்ந்த அடையாளங்களையோ, பொருட்களையோ அணிந்து வரலாம். ஆனால், முறையான சோதனைக்கு ஒத்துழைக்கும் வகையில், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே தேர்வு மையத்திற்கு வந்துவிட வேண்டும்.

சாதாரண ஆடைகளை அணிவதே சரியானது என்றாலும், தேர்வர்கள் தங்களுக்கு தேவை என்று உணர்ந்தால், முழுக்கை ஆடைகளையோ அல்லது கம்பளியிலான ஆடைகளையோ அணிய அனுமதிக்கப்படுவார்கள். அவற்றை சோதனையிடுவதற்கு தேர்வு மையத்துக்கு முன்கூட்டியே வரவேண்டும்.காலணிகளை பொறுத்தவரையில், சாதாரண செருப்புகள், குறைந்த உயரம் (லோ ஹீல்ஸ்) கொண்ட காலணிகளை அணியலாம். கனமான அணிகலன்களை அணிவதை தவிர்க்கவேண்டும். உயரமான காலணிகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.

நீலம் அல்லது கருப்பு நிற பால்பாயிண்ட் பேனா பயன்படுத்தலாம். மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் அதற்குரிய அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும். தேர்வின்போது கணக்கீடுகள் செய்வதற்கு அதற்கென்று வினாத்தாளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேர்வு முடிந்த பிறகு ஓ.எம்.ஆர். விடைத்தாள்களை தேர்வறை கண்காணிப்பாளர் வசம் ஒப்படைத்த பிறகு தேர்வு அறையை விட்டு வெளியே வர வேண்டும்.இதுபோன்ற பல்வேறு அறிவுரைகளை தேசிய தேர்வு முகமை முன்னே போதும் இல்லாத அளவுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் தேர்வு மையம் இருக்கும் இடத்தை முன்கூட்டியே வந்தடையும் வகையில் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube



Comments