Site Logo mobile
Search Icon
Mobile Gif
Uncategorized

திருச்சி மாவட்டத்தில் வாக்குபதிவு இயந்திரங்கள் வாக்குசாவடி மையங்களுக்கு எடுத்து செல்லும் பணி தீவிரம்.

திருச்சி மாவட்டத்தில் வாக்குபதிவு இயந்திரங்கள் வாக்குசாவடி மையங்களுக்கு எடுத்து செல்லும் பணி தீவிரம்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல்.23) நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கிழக்கு, மேற்கு, ஶ்ரீரங்கம், திருவெறும்பூர், மணப்பாறை, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகிய 9 தொகுதிகளிலும் மொத்தம் 21,47,051 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 2,787 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் முடிவடைந்து தயார் நிலையில் உள்ளது

மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 2787 வாக்குச்சாவடி மையங்களில் பதற்றமான வாக்குச் சாவடிகளாக 111 வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில், வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவை கண்காணிக்கவும், அசம்பாவிதங்களைத் தடுக்கவும் பாதுகாப்புப் பணியில் போலீஸாா் நியமிக்கப்பட்டுள்ளனா். இதன்படி, ஊரகப் பகுதிகளில் மாவட்ட காவல் துறை சாா்பில் 1,800 போலீஸாரும், மாநகரில் மாநகரக் காவல் துறை சாா்பில் 1,084 போலீஸாரும் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், ஊா்க்காவல் படையினா், துணை ராணுவப் படையினா், மத்திய ரிசா்வ் பாதுகாப்புப் படையினா், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினா் மற்றும் முன்னாள் ராணுவத்தினா் என தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

மேலும் நடைபெற உள்ள தேர்தலுக்காக திருச்சி மாவட்டத்தில் 7906 வாக்குப்பதிவு கருவிகளும், 3541 கட்டுப்பாட்டு கருவிகளும், 3810 விவி பேட் கருவிகளும் பயன்படுத்தப்பட உள்ளன. வாக்குபதிவு இயந்திரங்கள் மற்றும் கருவிகள், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில், அந்தந்த தொகுதிகளில் உள்ள தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

*வாக்காளர்கள் எண்ணிக்கை*

மணப்பாறை – 2,67,999

ஶ்ரீரங்கம் – 2,87,027

கிழக்கு – 2,20,191

மேற்கு – 2,38,920

திருவெறும்பூர் – 2,59,546

லால்குடி – 2,12,177

மண்ணச்சநல்லூர் – 2,36,500

முசிறி – 2,14,006

துறையூர் – 2,10, 685

மொத்தம் – 21,47,051 ஆகும்,

*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *