Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மணப்பாறை, மருங்காபுரி கூட்டு குடிநீர் திட்டம்: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை மற்றும் மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊரக குடியிருப்புகள் மற்றும் பொன்னம்பட்டி பேரூராட்சிக்கான கூட்டு குடிநீர் திட்டம், காவேரி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு 1 எண்ணம் நீர் சேகரிப்பு கிணறு மற்றும் இரண்டு எண்ணம் நீருந்து கிணறுகள் கீழவதியம் கிராமத்தில் அமைக்கப்பட்டு 14.87 எம்எல்டி குடிநீர் வழங்க வடிவமைக்கப்பட்டு இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு 12.69 எம்எல்டி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.


இதன் மூலம் பொன்னம்பட்டி பேரூராட்சிக்கு சுமார் 12,419 நபர்களுக்கு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 70 லிட்டர் வீதமும், 524 ஊரகக் குடியிருப்புகளில் 2,91,427 நபர்களுக்கு 40 லிட்டர் வீதமும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், இக்கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 310 ஊரக குடியிருப்புகள், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 364 ஊரக குடியிருப்புகள் என மொத்தம் 674 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தில் மலையபடிப்பட்டி நீருந்து நிலையத்திலிருந்து சீரான முறையில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட

ஆட்சித்தலைவர் திரு. வே.சரவணன்.இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினார்.
இவ் ஆய்வின்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாகப் பொறியாளர் திரு.கார்த்திகேயன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *