Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருவானைக்காவல் கோவில் ஆய்வு அமைச்சர் ரமேஷ்

இனி வருங்காலங்களில் கோவில் பிரசாதங்களில் தயாரிக்கப்பட்ட நாள் மற்றும் காலாவதி ஆகும் நாள் குறிப்பிடப்பட வேண்டும் – இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை அமைச்சர்பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமானதும், சுமார் 2000ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயமும், செங்கோட்சோழனால் கட்டப்பட்டதுமான திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி ஜம்புகேசுவரர் ஆலயம் மிகவும் பிரசித்திபெற்றதாகும்.பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்கும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து இன்று காலை தமிழக அறநிலையத்துறை அமைச்சரும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினருமான திரு ரமேஷ் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது ஒருங்கிணைந்த திருக்கோவில் மேலாண்மைத் திட்டம் ற்றும் அன்னதானத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் பக்தர்கள் மனநிறைவோடு தரிசனம் செய்யவும், அடிப்படை வசதிகள் தடையின்றி கிடைக்கவும் அறநிலை துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.பின்னர் கோவில் பிரகாரத்தில் உள்ள பிரசாத மையத்தை பார்வையிட்டார். அப்போது இனி வரும் காலங்களில் கோவில் பிரசாதங்களில் தயாரிக்கப்பட்ட நாள் மற்றும் காலாவதி ஆகும் நாள் குறிப்பிடப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.பின்னர் கோவில் யானை அகிலாவிற்கு பழங்கள் கொடுத்து ஆசீர்வாதம் பெற்றார்.

அதேபோல நேற்று 108 வைணவ தளங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வு செய்தார். அப்போது பக்தர்கள் தேவையான குடிநீர் சுகாதார வசதி குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர் மறைந்த மாண்புமிகு அம்மா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட நாள் முழுவதும் அன்னதானத் திட்டத்தில் உணவு அருந்தியும், ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://x.com/VisionTrichy

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *