நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற உள்ளது.திருச்சி மாவட்டத்தில் 12 மையங்களில் நடைபெறும் நீட் தேர்வை 6620 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு, மத்திய அரசின் தேர்வு முகமையால், நாடு முழுவதும் கடந்த மே 3ஆம் தேதி நடத்தப்பட்டது. ஆனால் வினாத்தாள் கசிந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. நீட் எழுதிய மாணவர்களுக்கு மீண்டும் மறுதேர்வு நடத்தப்படும் என தேர்வு முகமை அறிவித்திருந்தது. அதன்படி நாடு முழுவதும் (ஜூன்.21) நீட் மறு தேர்வு நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த மே மாதம் 6638 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

தேர்வர்களுக்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 மையங்கள், தேசிய கல்லூரியில் 2 மையங்கள், தேசிய தொழில்நுட்ப கழகத்தில் 2 மையங்கள், மண்ணச்சநல்லூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் – 1, லால்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் – 1, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் 2 மையங்கள், தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 மையங்கள் என 12 மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது.

தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி அணிகலன்கள் அணிந்து வரக்கூடாது. உயரம் அதிகமான ஹீல்ஸ் கொண்ட காலணிகள் அணிந்து வரக்கூடாது. வெளிப்படை தன்மை கொண்ட தண்ணீர் பாட்டில்கள் மட்டுமே எடுத்து வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேர்வு கண்காணிப்பாளர்கள் நடத்தக்கூடிய சோதனைக்கு மாணவ மாணவிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments