திருச்சி – திருப்பதி இடையே புதிய பகல் நேர இரயில் சேவைக்கு ஒன்றிய இரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது குண்டூர் மற்றும் திருப்பதி இடையே இயக்கப்பட்டு வரும் பகல் நேர இரயில் சேவையானது, இனி திருச்சிராப்பள்ளி வரை நீட்டிக்கப்பட உள்ளது. இதன் மூலம் இந்த இரயில் திருச்சி – குண்டூர் – திருப்பதி ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படும்.

இந்த இரயில் சேவைக்காக திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ , ஒன்றிய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தியதுடன், பல்வேறு கட்டங்களாகக் கடிதங்கள் வாயிலாகவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
27.03.2025: தென்னக இரயில்வே பொது மேலாளருக்குக் கடிதம்.
10.12.2025: ஒன்றிய இரயில்வே அமைச்சருக்குக் கடிதம்.
04.02.2026: அமைச்சருக்கு நினைவூட்டல் கடிதம்.
07.03.2026: திருச்சி மண்டல இரயில்வே மேலாளருக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம்.

இந்த நீட்டிக்கப்பட்ட இரயில் சேவை திருச்சி உள்ளிட்ட மத்திய மாவட்ட மக்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக அமையும். குறிப்பாக திருப்பதி செல்லும் பக்தர்கள், மாணவர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இதன் மூலம் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது கோரிக்கையை ஏற்று ஒப்புதல் அளித்த ஒன்றிய இரயில்வே அமைச்சர் மற்றும் இரயில்வே அதிகாரிகளுக்கு துரை வைகோ தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments