திருச்சி கோட்டை ரயில்வே மேம்பாலம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். திருச்சி ரயில்வே சந்திப்பு மேம்பாலம் ஜூன் மாத இறுதியில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.தமிழக அமைச்சர்கள் இன்னும் முழுமையாக நியமிக்கப்படவில்லை.

மீதமுள்ள துறைகளுக்கான அமைச்சர்கள் எப்போது நியமிக்கப்படப்போகிறார்கள் என்பதை முதலமைச்சரிடம் தான் கேட்க வேண்டும். அரசுத் திட்டங்கள் தொய்வின்றித் தொடர்வதற்கு விரைவில் துறை ரீதியான அமைச்சர்கள் நியமிக்கப்பட வேண்டும்.புதிதாக யார் ஆட்சி அமைத்தாலும் அவர்கள் செயல்பட உரிய கால அவகாசம் வழங்க வேண்டும். நெருக்கடியான பொருளாதார சூழ்நிலையிலும் முதலமைச்சர் விஜய் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். அவற்றை அவர் எவ்வாறு நிறைவேற்றுவார் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

எனவே, ஆறு மாதங்கள் கழித்துதான் அவரது செயல்பாடுகள் குறித்துக் கருத்து கூற முடியும்.முதலமைச்சர் விஜய், ‘தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைமையிலான அரசு குதிரை பேர அரசு அல்ல; குதிரை வேகத்திலான அரசு’ எனக் குறிப்பிட்டுள்ளார். அதன்படி அவர் செயல்படுவாரா என்று பார்க்க வேண்டும்.காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக போன்ற கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதிமுகவில் ஒரு பிரிவினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்; அதற்கான காரணத்தையும் அவர்கள் விளக்கியுள்ளனர். அதிமுகவில் நடப்பது உட்கட்சிப் பிரச்சினை என்பதால், அது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.டி.டி.வி. தினகரன் இதனைத் ‘குதிரை பேரம்’ எனக் கூறியுள்ளார். அது அவருடைய தனிப்பட்ட கருத்து. சட்டமன்றத்தில் விஜய்க்கு 140-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஆதரவு

அளித்துள்ளனர்.மகளிர் உரிமைத் தொகை மாதம் ₹2,500 ஆக உயர்த்திக் வழங்கப்படும் என விஜய் கூறியுள்ளார். அதனை அவர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஒருவேளை நிறைவேற்றவில்லை என்றால் நாங்கள் கேள்வி கேட்போம்.’விஜய் முதலமைச்சரானதற்கு 100 சதவீதம் சினிமா தான் காரணம்’ என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார். என்னைப் பொறுத்தவரை மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும்; அதைச் சிறுமைப்படுத்தக் கூடாது.தமிழ்நாட்டிற்கு இருமொழிக்

கொள்கை தான் அவசியம். தமிழர்கள் உலக அளவில் பல்வேறு நாடுகளில் சிறந்து விளங்க இருமொழிக் கொள்கை தான் காரணம். நாம் இந்திக்கு எதிரானவர்கள் கிடையாது; மொழித் திணிப்பிற்கு மட்டுமே எதிரானவர்கள்.திமுக கடந்த முறை போட்டியிட்ட திருச்சி கிழக்குத் தொகுதியில், வரவிருக்கும் இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடக் கோருவது குறித்த கேள்வி முறையற்றது” எனத் தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments