Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் முதல்வர் செல்லும் வழியில் அடையாளம் தெரியாத லாரி மோப்பநாய் சோதனை

திருச்சி ஓடத்துறை பகுதியில் முதலமைச்சர் பயணத்தடத்தில் சந்தேகத்திற்குரிய லாரி: போலீஸார் விசாரணை!கரூரில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் புதிய திட்டங்கள் மற்றும் 32 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனை வழங்குவதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்த தமிழக முதல்வர் விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூர் சென்றார். வழிநெடுகிலும் அவரை வரவேற்றுச் சாலையின் இருபுறமும் தவெக (TVK) கொடிகள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

திருச்சி கரூர் சாலையில் சஞ்சீவி நகர் கடந்து காவிரி ஆற்றின் ஓடத்துறை பகுதியில் முதலமைச்சரின் பயணத்தடத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் கேட்பார் யாரும் இல்லாமல் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியை, மாநகர போலீஸார் கிரேன் வாகனத்தின் உதவியோடு அகற்ற முயன்றனர். சரக்கு லாரியின் எடை அதிகமாக இருந்ததால், அதனை கிரேன் வாகனத்தால் அசைக்கக்கூட முடியவில்லை.

இந்நிலையில், சரக்கு லாரியை மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த போலீசார் சுற்றிலும் இரும்புத் தடுப்புகளை அமைத்து, அதனைக் கண்காணிப்பதற்காகப் போலீஸார் பணியமர்த்தப்பட்டனர்.போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உத்தரப் பிரதேசம் லக்னோ பகுதியில் உள்ள ‘PONET INFRA SOLUTIONS PVT.LTD.’ என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த லாரி, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பதிவு செய்யப்பட்ட வாகன எண் (MH04MR719) கொண்ட லாரி நேற்று இரவு திருச்சி வந்து நிலையில் மாநகருக்குள் நுழைய முடியாமல் பைபாஸ் சாலையில் சாலை ஓரம் நிறுத்திவிட்டு ஓட்டுநர் வெளியே சென்று விட்டார் என்பது தெரியவந்துள்ளது.

இதனால் கூடுதலாக அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *