திருச்சியில் கஞ்சா பயன்படுத்துவதைதட்டிக் கேட்ட நபரை கஞ்சா கும்பல் வெட்டி சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.திருச்சி மாநகரம் பாலக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடம் அருகே உள்ள கல்லுக்கார தெருவில் இருக்கும் எது குல நடுநிலை பள்ளி மைதானத்தில் கநேற்று இரவு சில இளைஞர்கள் கஞ்சா பயன்படுத்தி கொண்டு இருந்துள்ளனர். அதனை அப்பகுதியை சேர்ந்த ஓட்டுநர் பாலாஜி (31) என்பவர் தட்டிக் கேட்டுள்ளார்.

அதனால் ஆத்திரமடைந்த கஞ்சா கும்பல் பாலாஜியை சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர் அங்கிருந்து தப்பித்து ஓடவே அவரை துரத்திய அந்த கும்பல் அரிவாளால் வெட்டி அவரை தொடர்ச்சியாக கல் மற்றும் ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளனர்.

இதில் தாய்முகம் தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காயமடைந்த பாலாஜி அச்சத்தில் பாலக்கரை காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். காவலர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தாக்குதலுக்கு உட்பட்ட நபர் பாலாஜி,

தொடர்ச்சியாக அந்தப் பகுதியில் ஹரிஷ்,ஆகாஷ், விக்கி, பிரதீப் மற்றும் அவருடைய நண்பர்கள் கஞ்சா பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே அவர்களை தட்டிக் கேட்டுள்ளோம்.இது குறித்துகாவல்துறையில் புகார் அளித்துள்ளோம் ஆனால் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் இது வரை எடுக்கவில்லை.
இந்த நிலையில் தான் நேற்று அவர்கள் கஞ்சா பயன்படுத்திய பொழுது ஏன் இங்கு வந்து கஞ்சாவை பயன்படுத்துகிறீர்கள் என கேட்டேன் அப்பொழுது அவர்கள் என்னை சரமாரியாக தாக்கி விட்டனர்.
காவல் நிலையத்திற்கு அருகே வைத்து என்னை அவர்கள் வெட்டினார்கள் இருந்தபொழுதும் எந்த காவலர்களும் என்னை காப்பாற்ற வரவில்லை நானாக ஓடி சென்று காவல் நிலையத்தை தட்டி காவலர்களை வரவழைத்தேன். அந்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
அதேபோல பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவர் பேசுகையில்,
பாலக்கரை எடத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக கஞ்சா பழக்கம் போதை மருந்து பழக்கம் அதிகரித்து வருகிறது.
இது குறித்து ஏற்கனவே புகார் அளித்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை இந்த சூழலில் தான் நேற்று பாலாஜி என்பவரை கஞ்சா போதையில் இருந்த கும்பல் தாக்கியுள்ளனர்.
நேற்று இரவே அவர் அரசு மருத்துவமனைக்கு வந்திருக்காவிட்டால் அவர் உயிர் போயிருக்கும் நாளை எங்களுக்கும் இது போல் நடக்கலாம் எனவே காவல்துறையினர் இதில் அலட்சியம் காட்டாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
திருச்சி மாநகரில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பழக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாகவும் உடனடியாக இதை கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான் பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாகவும் வேண்டுகோளாகவும் இருக்கிறது.திருச்சியில் கஞ்சா பயன்படுத்தும் இளைஞர்களை தட்டி கேட்ட நபர் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments