Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் கோயில் இடிப்பு – குளங்கள் அழிப்பு – அரசு நிலம் ஆக்கிரமிப்பு.

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா, புள்ளம்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட குமுளூர் அருகே உள்ள பெருவெள்ளநல்லூர் கிராமத்தில் அரசு நில ஆக்கிரமிப்பு தொடர்பான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதியில் இயங்கி வரும் சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனம், அரசுக்கு சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 


அதுமட்டுமல்லாமல், பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த மூன்று குளங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், வரலாற்று சிறப்புமிக்க பழமையான சிவன் கோயில் கடந்த 2021 கொரோனா காலகட்டத்தில் இடிக்கப்பட்டதாகவும், அங்கிருந்த சிவலிங்கம் மற்றும் வரலாற்று சின்னங்கள் அகற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே போர் நடைபெற்ற வரலாற்று இடமாக இந்த பகுதி கருதப்படுவதால், இந்த விவகாரம் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.


அரசு நிலங்களை மீட்கவும், மூன்று குளங்களை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், கோவில் இடத்தை மீட்டு மீண்டும் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்கவும் கோரி விவேகானந்தன், ம.ப. சின்னதுரை, மேகநாதன், இலியாஸ் பாஷா, நடராஜன் மற்றும் அபூபக்கர் உள்ளிட்டோர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை உடனடியாக அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.


இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாக உத்தரவின் பேரில் லால்குடி தாசில்தார் தமிழ்ச்செல்வன், கோட்டாட்சியர் ஸ்ரீதர், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, நீதிமன்ற உத்தரவை முழுமையாக செயல்படுத்தவில்லை என்றும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக சில அதிகாரிகள் செயல்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.
இதனால் அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.அதிகாரிகள் மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 


அனைத்து ஆவணங்களும் இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், இதை நீதிமன்ற அவமதிப்பு வழக்காக எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *