Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

துறையூர் அருகே தவெக கட்சியினரை நேருக்கு நேர் வறுத்தெடுத்த நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளர்,இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது!

திருச்சி மாவட்டம், துறையூர் தனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு கட்சியினர் தங்களின் இறுதி கட்ட பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்,

இந்நிலையில் முத்தையம் பாளையம் கிராமத்தில் வாக்கு சேகரிப்பதற்காக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஆசிரியர் கவுசல்யா திறந்தவெளி வேனில் சென்றுள்ளார்

அங்கு தமிழக வெற்றி கழக கட்சியினர் மாலை நடைபெற உள்ள பிரச்சார கூட்டத்திற்காக காலையிலேயே மைக் செட் கட்டி பாடல் பாடிக்கொண்டு விசில் அடித்துக் கொண்டாடி ஆரவாரம் செய்து கொண்டிருந்தனர்,

அங்கு சென்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கவுசல்யா தனது பிரச்சார வாகனத்தில் இருந்து கரூரில் நடைபெற்ற துயர சம்பவம் குறித்து விமர்சனம் செய்துள்ளார்,

அப்பொழுது அங்கு கூடியிருந்த விஜய் ரசிகர்கள் வேட்பாளரிடம் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளனர்,

இதனால் கோபம் அடைந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌசல்யா நாட்டில் ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் உள்ளன, மருத்துவர் பிரச்சனை, செவிலியர் பிரச்சனை, பெண் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உள்ளன, ஆனால் இதெல்லாம் எதைப் பற்றியும் கவலைப்படாத உங்கள் தலைவர் தன்னைக் காண வந்த ரசிகர்களின் இறப்புக்கே நேரில் செல்லாத உங்கள் தலைவர் ஒரு பிரச்சனைக்காக களத்தில் இறங்கி போராடுவாரா ? முதலில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கொடி பிடிக்க கூடாது பிரச்சாரம் செய்யக்கூடாது என்பது விதி.

இங்கு இருப்பவர்கள் எல்லாம் 18 வயதுக்கு கீழ் பட்டவர்கள் என்று கூறி கடுமையாக விமர்சனம் செய்தார், இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *