Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி பாபு ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை மக்களின் போராட்டத்தியடுத்து நிரந்தரமாக மூடப்பட்டது

திருச்சி பாபு ரோடு பகுதியில் டாஸ்மாக் மதுபான (கடை எண் 10252 ) கடை பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது

மதுபான கடை அருகே கோவில், பள்ளிவாசல், பள்ளி இயங்கி வருகிறது இந்நிலையில் விஜய் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து மது ஒழிப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பில் தீவிரம் காட்டி வருகிறார் முதற்கட்டமாக 717 மதுக்கடையை மூட

உத்தரவிட்டிருந்தார் இந்நிலையில் இந்த மது கடை பாபு ரோடு பகுதியில் பல வருடமாக இயங்கி வருகிறது இதன் அருகே பள்ளி, கோவில், பள்ளிவாசல் உள்ளிட்டவைகள் உள்ளன அதே போன்று இப்பகுதி மிகவும் குறுகலான பகுதி மலைக்கோட்டை அருகே அமைந்துள்ளது இதனை மூட வேண்டும் என பல வருடங்களாக பொதுமக்கள் போராடி வருகின்றனர்


தற்பொழுது மூடப்படும் 717 கடைகளில் இந்த கடை பெயர் இல்லை எனக் கூறி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

தொடர்ந்து தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார் பொதுமக்கள் கலைந்து போக மறுத்தனர்

இந்நிலையில் பொதுமக்கள் கடையை நிரந்தரமாக மூடினால் தான் போராட்டத்தை கைவிட முடியும் என்று கோரிக்கை வைத்தனர் டாஸ்மாக் அதிகாரி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கடையை நிரந்தரமாக மூடப்படும் எனக் கூறி உறுதி அளித்தார்
தொடர்ந்து கடை மூடப்படுகிறது என்று பதாகை அங்கு ஒட்டப்பட்டது
அதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *