திருச்சியில் ரயில்வே
கோட்ட மேலாளர் பாலக் ராம் நெகி செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது.பொது மேலாளர் ஒட்டுமொத்த திறன் மேம்பாட்டில் 2வது இடம், இயந்திரவியல் துறை, மருத்துவ துறை செயல் பாடு, பணியாளர்கள், சிறந்த

பயிற்சி மையம், டீசல் துறை, சிறந்த ஸ்டோர், துாய்மையான ரயில்வே நிலையம் ஆகி யவற்றுக்கான முதலிடமும், 2வது இடத் திற்கான விருதையும் திருச்சி ரயில்வே கோட் டம் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. சென் னையில் நடந்த விக்ஷித் ரயில் சேவா புரஸ்கார் 2026 எனும் விருது வழங்கும் விழாவில் தென்னக ரயில்வே பொது மேலா ளர் ஆர்.என். சிங், திருச்சி கோட்ட மேலாளர் பாலக் ராம் நெகியிடம் இதற்கான விருதுகளை வழங் கினார்.

2025-26ம் ஆண்டில் ரூ.ஆயிரத்து 390 கோடி திருச்சி ரயில்வே கோட் டம் வருவாய் ஈட்டியுள் ளது. 41 மில்லியன் பய
ணிகளை கையாண்டு திருச்சி கோட்டம் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. 13.24 மில்லியன் டன் சரக்கு அனுப்பி தொடர்ந்து 4வது ஆண்டாக முதலிடம் தக்க வைத்துள்ளது. திருச்சி கோட்டத்தில் இயக்கப் படும் 94.14 சதவீதம் ரயில்கள் சரியான நேரத்திற்கு வந்து புறப்பட்டு சென்றுள்ளன. திருச்சி ரயில்வே ஜங்சனில் கூடுதலாக ஜூன் இறுதிக்குள் 6 எஸ்கலேட்டர் அமைக் கப்பட உள்ளது.

தஞ்சாவூர், விழுப்புரத்தில்
எஸ்கே லெட்டர் அமைக்கும் பணி நடக்கிறது.
பல்வேறு துறைகளில் பெற்ற 8 விருதுகளுடன் திருச்சி ரயில்வே
கோட்டம் பெற்றுள்ளது.
ஜங்சனில் எஸ்கலேட்டர் அமைக்கும் பணி நடக் கிறது. பாதுகாப்பு நடவ டிக்கையாக 139 இன்டர் லெவல் லாக்டு கிராஸிங்கில் தானியங்கி செயல்பாட்டு முறை அமைக்கப்பட்டுள்ளது. ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் அர்ப்பணிப்பு பணியால் திருச்சி கோட்டம் 8 விருதுகள் பெற் றுள்ளது என்றார். மாரிஸ் ரயில்வே மேம்பாலம் இந்த ஆண்டு டிசம்பரிலும், ஜங்சன் அரிஸ்டோ மேம்பாலம் அடுத்தாண்டு ஜனவரிக்

குள் பயன்பாட்டிற்கு வந்து விடும். திருச்சி விழுப்புரம் இடையில் இயக்கப்படும் ரயிலின் வேகம் அடுத்தாண்டு மார்ச்சுக்குள் அதிகரிக்கப்படும். 2028ல் நடக்க ஹ வுள்ள மகாமகத்திற்காக கும்பகோணம், திருநா கேஸ்வரம் ஜங்சனில் அனைத்து வசதியும் மேற்கொள்ளப்படும் என்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments