தமிழக வெற்றிக்கழக டெல்டா மண்டல கண்காணிப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கு.ப. கிருஷ்ணன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது..
தமிழக முதலமைச்சர் விஜய் காலையில் 9:30 மணிக்கு தலைமைச் செயலகம் வருகிறார் தினமும் ஒவ்வொரு துறையை ஆய்வு செய்து வருகிறார். அதன் முடிவுகளும் அன்றைய தினமே தெரிய வருகிறது. திருச்சி கிழக்கு தொகுதியில் நான் போட்டியிட வாய்ப்புள்ளதா என கேட்கிறீர்கள்.

இந்த தொகுதியில் தமிழக முதலமைச்சர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது அவரது பிரதிநிதியாக யாரை நிறுத்தினாலும் வெற்றி பெறுவார்கள். தமிழக வெற்றி கழகம் மூன்று டிஜிட் நம்பரில் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது திமுக இரண்டு டிஜிட் நம்பரில் தான் வெற்றி பெற்றுள்ளது ஆகவே மு க ஸ்டாலின் போட்டியிட்டாலும் இந்த தொகுதியில் தமிழக வெற்றி கழகம் தான் வெற்றி பெறும். மக்களின் எதிர்பார்ப்புகளை விஜய் பூர்த்தி செய்வார் ஊழல் இல்லாத தூய்மையான அரசை தருவோம்.

தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் வாக்களித்த அத்தனை எம்எல்ஏக்கள் பதவிகளையும் எடப்பாடியார் பரித்துள்ளார். ஆனால் ஒருவரது பதவியை மட்டும் அவர் பறிக்கவில்லை. அதற்கான காரணத்தை அவர் தெரியப்படுத்த வேண்டும்.சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, திருச்சியில் அதிமுகவிலிருந்து விலகி மாற்றுக்கட்சியில் இணையும் இந்த சம்பவம், மாவட்ட அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் கலகலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments