திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன்,இ.ஆ.ப., வழிகாட்டுதலின்படி, திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், திருச்சிராப்பள்ளி மாநகர் பகுதிகளில் யாசகம் பெறும் நபர்களை மீட்டு மறுவாழ்வு அளித்திடும் வகையில் களப்பணி ஆய்வு 12.05.2026 அன்று நடைபெற்றது.

இந்த ஆய்வில், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலர், தொழிலாளர் நலத்துறை, காவல்துறை அலுவலர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்கள், சிறப்பு சிறார் காவல் அலகு சமூக பணியாளர்கள் மற்றும் தணல் கருணை இல்லம், ஸ்மைல் டிரஸ்ட், விடிவெள்ளி முதியோர் இல்லம், நம்பிக்கையகம், கங்காரு முதியோர் இல்லம் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சிராப்பள்ளி மாநகரம் கே.கே.நகர், மன்னார்புரம் மற்றும் மத்தியபேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 10 யாசகம் பெறும் நபர்கள் (ஆண்கள்-06, பெண்கள் -04)மீட்கப்பட்டு முதியோர் இல்லங்கள் மற்றும் யாசகம்

பெறுவோர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் மறுவாழ்வு ஏற்படுத்துவதற்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், வேலை செய்யும் சூழ்நிலையில் இருந்த 02 சிறுவர்கள் மீட்கப்பட்டு குழந்தைகள் நலக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
மேலும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் யாசகம் பெறுவோர்கள் கண்டறியப்பட்டால் 6369103413 என்ற கட்செவி (Whatsapp) எண்ணில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments