திருச்சி காட்டூர் கைலாஷ் நகரை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் ஆக்சிஸ் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் குடும்பத்தினருடன் காரில் ஆயில் மில் ரோடு சோதனைச் சாவடி அருகே வந்து கொண்டிருந்தபோது காரில் இருந்து புகை வந்துள்ளது. உடனடியாக காரை நிறுத்திய அவர் காரை விட்டு இறங்கி பார்த்தபோது தீ பிடித்து எரியத் தொடங்கியது. உடனடியாக காரில் இருந்தவர்கள் கீழே இறங்கினர்.
காரில் பற்றிய தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. உடனே அங்கு இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் முயற்சி பலனளிக்காமல் கார் முற்றிலும் எரிந்தது.
காரில் தீ பற்றிய உடன் தீயணைப்பு துறைகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில் தீயணைப்பு வாகனம் காலதாமதம் வந்ததால் கார் முற்றிலும் எரிந்துள்ளது. இந்த தீ விபத்து குறித்து அரியமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments