திருச்சியில் அமைச்சர் மகேஸ் தொகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தராத அதை கண்டித்து மக்கள் கருப்பு கொடி ஏற்றி குடியரசு தின விழாவை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பழைய வார்டு எண்.31, புதிய வார்டு எண் 45, காரூண்ய நகரில் 80 மேற்பட்ட வீடுகள் உள்ளன. திருவரம்பூர் அருகே உள்ள இந்த பகுதியில் 10 ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. அமைச்சரிடம் பல மனுக்கள் கொடுத்தும் எவ்வித பயனும் இல்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
அடிப்படை வசதி கேட்டு கேட்டு பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து இன்று 26 1.2023 குடியரசு தினத்தை புறக்கணித்துஅனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடைபெற்றது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments