திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை சாலையில் தனியா (25), தமிழ் (29) என்ற இரு திருநங்கைகள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த அரியமங்கலம் போலீசார் விபத்தில் உயிரிழந்த 2 திருநங்கைகள் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து ஏற்படுத்திய டிப்பர் லாரி ஓட்டுனரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments