சிறியவர், பெரியவர் என அனைவரும் உற்சாகமாக கொண்டாடும் ஒரு பண்டிகை நாள் கிருஷ்ண ஜெயந்தி ஆகும். கிருஷ்ணரின் பிறப்பை கோபியர்கள் கொண்டாடியதை நினைவுபடுத்தும் விதமாக இன்று நாமும் சிறப்பாக கொண்டாடி மகிழ்கிறோம்.


அந்த வகையில் அஸ்வின் ஸ்வீட்ஸ் மற்றும் ஸ்னாக்ஸ் நிறுவனம் மற்றும் நலம் குருகுலம் சார்பாக லிட்டில் கிருஷ்ணா பெஸ்டிவல் நிகழ்ச்சி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மாயாஸ் ஹோட்டல் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அஸ்வின் ஸ்வீட்ஸ் மற்றும் ஸ்னாக்ஸ் குழுமத்தின் நிறுவனர் கணேசன் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக பிரபல தமிழ் நடிகை ஜானகிமா கலந்துகொண்டு கிருஷ்ணர் ராதை வேடமணிந்து வந்த குழந்தைகளுக்கு கிருஷ்ணர் ராதையின் கதையை கூறி குழந்தைகளை மகிழ்வித்தார்.

மேலும் நிகழ்ச்சிக்கு அஸ்வின் ஸ்வீட் மற்றும் ஸ்நாக்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் செல்வகுமாரி கணேசன், அஸ்வின், சிபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அஸ்வின் ஸ்வீட்ஸ் மற்றும் ஸ்னாக்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி நிஷா சிபி செய்திருந்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள் கிருஷ்ணர், ராதை, கண்ணன், கோதை ஆகியோரின் வேடம் அணிந்து ராம் வாக் செய்து காட்டினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு அஸ்வின் ஸ்வீட் மற்றும் ஸ்னாக்ஸ் குழுமத்தின் நிறுவனர் கணேசன், செல்வகுமாரி ஆகியோர் மெடல் அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர் நிகழ்ச்சியில் குழந்தைகள் பெற்றோர் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்..

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           128
128                           
 
 
 
 
 
 
 
 

 26 August, 2024
 26 August, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments