மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தி.மு.க வேட்பாளர் மண்ணச்சநல்லூர் S. கதிரவன் BE., 17.04.2026 வெள்ளிக்கிழமை அன்று தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். காலையில் மண்ணச்சநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு 1 முதல் 18 வரையிலான பகுதிகளில் காலை 7:00 மணி முதல் 12:30 மணி வரை பயணம் செய்கிறார். இப்பயணம் காலை 7:00 மணிக்கு ஸ்ரீ கள்ளி வனத்தாயி அம்மன் கோவிலில் தொடங்கி, தொடர்ந்து தேர்முட்டி வாரித் தெரு, மேல சீதேவிமங்கலம் கிராமம், சமயபுரம் சாலை, புதுக்காலனி, பாரதிதாசன் தெரு, துறையூர் எதுமலை சாலை

சந்திப்பு ரங்கா ஸ்வீட்ஸ், மேல செட்டித் தெரு சிவானி கம்பெனி வழியாகச் செல்கிறது. பின்னர் காலை 9:30 மணிக்கு உளுந்தங்குடி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், நடுப்பெரிய தெரு, மேல வாரித் தெரு, புதுச்செட்டி தெரு, தெற்கு ஏரிமிஷன் தெரு மற்றும் 10:50 மணிக்கு துறையூர் சாலை ஸ்கைபிரிட்ஜ் ஆகிய இடங்களைச் சென்றடைகிறார். முற்பகல் வேளையில் திருநகர் 5வது தெரு, காந்தி நகர் 6வது மற்றும் 1வது தெருக்கள், நடுப்பொரிய தெரு மேல கல்பாளையம், கிழக்கு காமராஜர் காலனி, கோவில் பிள்ளையார், ஜோதி மாரியம்மன் கோவில் வழியாகப் பயணித்து, மதியம் 12:30 மணிக்கு அத்தானி கிராமத்தில் காலை நேரப் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.

அதே நாள் மாலை 4:30 மணி முதல் இரவு 8:40 மணி வரை மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியப் பகுதிகளில் பிரச்சாரம் நடைபெறுகிறது. முதலில் இனாம் சமயபுரம் ஊராட்சியில் புதூர் பூசாரிக்கோட்டம், ஒத்தக்கடை, இனாம் சமயபுரம் மற்றும் மாணிக்கபுரம் வடகரை ஆகிய இடங்களில் மாலை 5:10 மணி வரை பிரச்சாரம் செய்கிறார். அதன் பிறகு இருங்களூர் ஊராட்சியில் சோழமொழி நகர், முல்லை நகர், நடு இருங்களூர், அருந்ததியர் தெரு, ஆதி திராவிடர் தெரு, மாரியம்மன் கோவில் தெரு மற்றும் தெற்கு இருங்களூர் தோமையார் ஆலயம் வழியாகப் பயணம் தொடர்கிறது. மாலை 6:30 மணிக்கு செக்போஸ்ட் காந்தி நகர், நோவா நகர் மற்றும் ராஜா நகர் பகுதிகளைக் கடந்து மேட்டு இருங்களூர், புதுப்பட்டி, அண்ணா நகர் மற்றும் புறத்தாக்குடி வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் மாலை 7:30 மணி வரை வாக்குச் சேகரிக்கிறார்.

இறுதியாகக் கொண்டலை ஊராட்சியில் கொண்டலை கல்பாளையம், காந்தி கிராமம், அந்தோணியார் கோவில், ஆதி திராவிடர் காலனி மற்றும் கொண்டலை சரளைமேடு வழியாகச் சென்று, இரவு 8:40 மணிக்கு கீழக்காடு பகுதியில் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்கிறார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments