Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

நாளை ஊதியத்துடன் விடுமுறை இல்லையா? புகார் தெரிவிக்கலாம்

தேர்்த்தல் நாளான அரசு விடுமுறையை வழங்காமல் இருந்தாலோ, ஊதியம் பிடித்தம் செய்தாலோ, தொழிலாளர்கள் உடனடியாக புகார் அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு (ஏப். 23) அந்த நாளை அரசு பொதுவிடுமுறையாக அறிவித்துள்ளது. இதையடுத்து அனைத்து தனியார் நிறுவனங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும்.

தேர்தல் நாளில் தொழிலாளர்களை வேலைக்கு வருமாறு கட்டாயப்படுத்துவதோ, ஊதியத்தில் குறைப்பு செய்வதோ சட்டவிரோதமானது. அவ்வாறான புகார்கள் இருந்தால் உடனடியாக மாவட்ட தொழிலாளர் நலத்துறையிடம் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், தொழிலாளர்கள் தங்கள் வாக்குரிமையை தடையின்றி பயன்படுத்துவதற்காக தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட வேண்டும். விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
புகார் தெரிவிக்க தொடர்பு எண்கள்:
தொழிலாளர் உதவி ஆய்வாளர் (அமலாக்கம்) – 94453 98756
தொழிலாளர் துணை ஆய்வாளர் – 90805 38435
பால. குணசீலன் – 98945 74212
மு. சித்ரா – 79042 99623
செ. முருகானந்தம் – 80726 35674
ராஜேந்திரன் – 88383 73168
டா. ராஜேசுவரன் – 70106 04808
வ. சங்கரமூர்த்தி – 70100 87457
வி. யுவராஜ் – 96776 06329
சு. ராஜேஷ் – 99524 67949
ரா. வாஹினி – 90036 78552
பா. நாகேந்திரன் – 80724 50796

*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Instagram*
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://www.threads.net/@trichy_vision
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *