திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்காடு, பச்சனாம்பட்டி பகுதியை சேர்ந்த தனபால் 44/20, த/பெ.பிச்சை என்பவர் அவரது குடும்பத்துடன் பரம்பரை நிலத்தில் வசித்து வந்தார். அவரின் வீட்டிற்கு அருகே அவரது சகோதரர் ராமசாமி, த/பெ.பிச்சை, வடக்கிப்பட்டி, திருந்தியமலை, முசிறி வசித்து வந்துள்ளார். மேற்படி இருவருக்கும் இடையே பரம்பரைச் சொத்தைப் பிரிப்பது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 17.07.20 -ம் தேதி தனபால் வீட்டிற்கு அருகில் இருந்த மரத்தின் கிளையானது உடைந்து ராமசாமி வீட்டில் உள்ள ஹாஸ்பெட்டாஸ் சீட்டின் மீது விழுமாறு உள்ளது என்றும், உடனடியாக அந்த மரத்தின் கிளையை வெட்டுமாறு தனபாலிடம் ராமசாமி கூறியுள்ளார். அதற்கு தனபால் இப்பொழுது வேண்டாம் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறியள்ளார்.

இதனால், மேற்படி இரண்டு தரப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில் ராமசாமி மற்றும் அவரது மகன் ராமச்சந்திரன் ஆகியோர் மண்வெட்டி மற்றும் அரிவாள் எடுத்து வந்து மேற்படி தனபாலை கடுமையாக தலையில் தாக்கி அவரை வெட்டிள்ளனர். மேலும், தனபாலை காப்பாற்ற முயன்ற அவரது தந்தை பிச்சை 94/20, த.பெ.ராமசாமி என்பவரையும் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த தனபால் சம்பவ இடத்திலயே உயிரிழந்துவிட்டார். காப்பாற்ற முயன்ற பிச்சை என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டு சிகிச்சைகாக முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேற்படி சம்பவம் தொடர்பாக இறந்து போனவரின் மனைவி உமாமகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் முசிறி காவல் நிலைய குற்ற எண். 1634/20, U/s 294(b), 324, 302 IPC -ன் படி 17.07.2020 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்கள். இவ்வழக்கின் விசாரணை திருச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் (III-ADJ) நடைபெற்று வந்தது.

மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக திரு. A. ஆனந்தன், ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் இன்று (21.04.2026) திருச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி திரு.சரவணன் (III – ADJ) அவர்கள் எதிரி -1 ராமசாமி, த/பெ. பிச்சை, வடக்கிப்பட்டி, திருந்தியமலை, முசிறி என்பவருக்கு ஆயுள் தண்டனையுடன் சேர்த்து ஒரு வருட சிறைத்தண்டனை மற்றும் ரூபாய். 5,000 அபராமும், எதிரி-2 ராமச்சந்திரன், த.பெ. ராமசாமி என்பவருக்கு ஆயுள் தண்டனை, ரூபாய். 5,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இந்நிலையில், இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்ற நடவடிக்கைகளை சரிவர கவனித்த முசிறி காவல் ஆய்வாளர் திரு. செல்லத்துரை மற்றும் நீதிமன்ற தலைமை காவலர் திரு.நடராஜன் மற்றும் பெண் காவலர் திருமதி. திவ்யா ஆகியோரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப அவர்கள் வெகுவாக பாராட்டி, வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments