திருச்சிராப்பள்ளி, மகாத்மா காந்தி நிணைவு மருத்துவமணையில் மூளைச் சாவு அணடந்த ஒருவரின் உடலில் இருந்து கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் ததால் தாைமாக இன்று (29.04.2026) பெறப்பட்டது. இதுதொன்ற நிகழ்வு 30 வது முணறயாக நடக்கிறது
திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா வேம்பனூரைச் சேர்ந்த பெரியண்ணன் என்பவர் (வயது 22) 19.04.2026 அன்று மரத்திலிருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயத்துடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 27.04.2026 அன்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

பல்வேறு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் 28.04.2026 அன்று மதியம் 12.50 மணிக்கு அவர் மூளைச் சாவு அடைந்தார். இந்த மூளைச் சாவு மருத்துவக் குழுவினரால். உறுதி செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை உணர்ந்த இறந்தவரின் உறவினர்கள் முழு மனதுடன் அவருடைய உடல் உறுப்புகளை தானம் அளிக்க முன்வந்தார்கள். மேலும், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி அவருடைய உறுப்புக்களான கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள். கண்கள் மற்றும் தோல் தானமாக இன்று (29.04.2026) பெறப்பட்டது.
தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி உடல் உறுப்பு வேண்டி பதிவு செய்தவர்களின் வரிசையின்படி. கல்லீரல் புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும். ஒரு சிறுநீரகம் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும்.
மற்றொரு சிறுநீரகம் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு மருத்துவ பயனாளிக்கும், கண்கள் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பயனாளிக்கும் மற்றும் தோல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பயனாளிக்கும் தானமாக வழங்கப்பட்டது.
TRANSTAN அமைப்பின் வழிகாட்டுதலின்படி, உடல் உறுப்பு வேண்டி பதிவு செய்தவர்களின் வரிசையின்படி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் நான்கு வருடங்களாக தொடர்ச்சியாக இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வந்த 40 வயது மதிக்கத்தக்க மருத்துவ பயனாளிக்கு 29.04.2026 அன்று இம்மருத்துவமனை முதல்வர் பேரா.மரு.ச.குமரவேல், MS., Ortho., D.Ortho., DNB Ortho., Ph.D., ACME நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவக்குழு மூலம் முதலமைச்சரின் விரிவான கப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக. மாற்று சிறுநீரகம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு மருத்துவ பயனாளி தீவிர கண்காணிப்பில் உள்ளார். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையானது நமது மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 56-வது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஆகும். உடல் உறுப்பு தானம் செய்த கொடையாளிக்கு மருத்துவமனை முதல்வர் அவர்களின் தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள். மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் திரளாக ஊர்வலமாக வந்து மரியாதை செலுத்தப்பட்டு வழியனுப்பப்பட்டார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_visio
Youtube





Comments