திருச்சி மாவட்டம், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்களின் விற்பனையாளர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப, அவர்களின் உத்தரவின் பேரில் பொதுஇடங்கள், கல்வி நிறுவனங்கள் அருகில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தை தடுக்க கடந்த இரண்டு நாட்களாக தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அதன்படி, நேற்று (28.04.2026) உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரவிந்தர் (29), த.பெ.மனோகரன், நெட்டவேலம்பட்டி, துறையூர் என்பவர் பச்சபெருமாள்பட்டியில் நடத்திவரும் அவரது கடையில் ஹான்ஸ் 375 பாக்கெட் (112.5 கிலோ), 2.வி1 பாக்கு-230 பாக்கெட்(2.415 கிலோ), கூலிப் 70 பாக்கெட் (17.160 கிலோ), விமல் -291 பாக்கெட் (17.160 கிலோ) என மொத்தமாக -136 கிலோ (மதிப்பு – ரூ.99,700) புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவரை கைது செய்து அவர் மீது உப்பிலியபுரம் காவல் நிலைய குற்ற எண். 139/26, U/s 123 BNS & 6 r/w 24(1) COTPA Act ன் படி வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

மேலும், இன்று (29.04.2026) கீழ அம்மாபேட்டை அருகே புகழேந்தி (28), த.பெ.தனபால், கீழ அம்மாபேட்டை, பூலாங்குளத்துப்பட்டி, ஸ்ரீரங்கம் மற்றும் பாண்டியராஜ் 29/26 த.பெ.அயனான், ஆர்ச்சம்பட்டி, குளித்தலை, கரூர் ஆகியோர் விற்பனைக்காக வைத்திருந்த ஹான்ஸ் -273.2 கிலோ), 2.வி1பாக்கு- 6.400 கிலோ), கூலிப்- 9.600 கிலோ, விமல் – 16.800 கிலோ மொத்தமாக 306 கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவரை கைது [செய்து] 66. 138/26, U/s 123 BNS & 6 r/w 24(1) COTPA Act ன் படி வழக்கு பதிவு செய்து எதிரி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளார்.

இதேபோல், இனிவரும் காலங்களில் புகையிலை மற்றும் போதை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க மாவட்ட காவல்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், அதனையும் மீறி பொது இடங்கள், கல்வி நிறுவனங்கள் அருகில் மற்றும் கடைகளில் புகையிலை பொருட்களை சில்லைறையாகவோ அல்லது மொத்தமாகவோ விற்பனை செய்வது தெரிய வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் கடைகளில் முறையாக அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் விதிகளை மீறி புகையிலை பொருட்களை முதல்முறையாக விற்பனை செய்யும் விற்பனையாளருக்கு அபராதமும், இரண்டாவது முறையாக விற்பனை செய்பவர்களின் கடையின் வணிக உரிமம் (Trade License) நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments