திருச்சி காட்டூர் விக்னேஷ் நகர் பகுதியில் நவீன மற்றும் மேம்பட்ட வசதிகளுடன் கூடிய PAWS PET CLINIC மருத்துவமனை இன்று புதிய வடிவில் திறக்கப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளாக காட்டூர் கைலாஷ் நகர் பகுதியில் செயல்பட்டு வந்த இந்த கால்நடை மருத்துவமனை , தற்போது புதிய தோற்றத்துடன் 24 மணி நேர கால்நடை மருத்துவமனை சேவையுடன் தனது செயல்பாட்டை தொடங்கியுள்ளது.

இந்த கால்நடை மருத்துவமனையில் செல்லப்பிராணிகளுக்கான பல்வேறு வகையான உணவுப்பொருட்கள் மற்றும் அணிகலன்கள் கிடைக்கின்றன. மேலும், பெட் கிரூமிங், ஸ்கேனிங், ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ வசதிகளுடன், பெட் ஸ்பா சேவையும் வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் இந்த மருத்துவமனையின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக டாக்டர் கணேஷ்குமார் மற்றும் கீதா கணேஷ்குமார் கலந்து கொண்டனர். நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய இந்த கால்நடை மருத்துவமனை , செல்லப்பிராணி பராமரிப்பில் சிறந்த சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube



Comments