Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மணல் வியாபாரியிடம் ரூ.20,000 லஞ்சம் – VAO பேரம் வீடியோ வைரல்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் சரவணன். இவர் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு மணல் வியாபாரியிடம் நீங்கள் மண் அள்ளுவதற்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க தனக்கு மாதந்தோறும் ரூ 50,000 லஞ்சம் என வேண்டும் என பேரம் பேசி புத்தாநத்தம் காவல் நிலையம் முன்பே 20000 ரூபாய் லஞ்சம் வாங்கும் வீடியோ மற்றும் பேரம் பேசும் தொலைபேசி உரையாடல்கள் வெளியான நிலையில் இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோவில் புத்தாநத்தம் காவல் நிலையம் முன்பு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் உள்ள நிலையில் அங்கு வரும் நபர் ஒருவர் கிராம நிர்வாக அலுவலர் சரவணனிடம் பேசுவது பதிவாகியுள்ளது அதில் விஏஓ சரவணனிடம் நீங்கள் ரூபாய் 50,000 கேட்டீர்களாம் என்று கூறும் க்ஷ நபர் ஐந்தாயிரம் தருவதாக கூறுவதும், அதற்கு விஏஓ பட்டாவிற்கே ஐந்தாயிரம் வாங்குகிறோம்.

 

இப்போது 20 ஆயிரமாவது கொடுங்கள் என்பதும், நாங்கள் ரெகுலராக ஓட்டுவது இல்லை. எனவும் பேசுவதும் இறுதியாக விஏஓ இருபதாயிரம் கேட்பதும் பதிவாகியுள்ளது. அதேபோல் மற்றொரு வீடியோவில் புத்தாநத்தம் காவல் நிலையம் முன்பு ஒரு மரத்தடியில் கருப்பு சட்டை அணிந்துள்ள ஒரு வாலிபர் விஏஓ சரவணனிடம் பேசி அடுத்து ஆர்டர் வரும் போது உங்களிடம் சொல்லிவிட்டே செய்கிறேன். பார்த்து பண்ணிக்கலாம் என்று கூறி தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து விஏஓ விடம் கொடுப்பதும் அதை அவள் வாங்கி வைத்துக் கொள்வதும் பதிவாகி உள்ளது. இதேபோல் தொலைபேசி உரையாடலில் வண்டி ஓடும்போது தகவல் கொடுங்கள் ஜோனல், டி.டி. அனைவரும் ரவுட்ன்சிலதான் இரவு பகலாக உள்ளனர் எனக்கு பிரச்சனை வந்துவிடும். உங்களை செய்ய வேண்டாம் என்று கூறவில்லை என விஏஓ கூற, நான் பர்மிட் போட்டு தான் ஓட்டினேன். இப்பொழுது ஒரு நடை அவசரம் என்பதால்தான். என்கிறார். அதற்கு விஏஓ நான் ஒன்னும் பிரச்சனை எல்லாம செய்யவில்லை. பார்த்து செய்யுங்கள் என்பதும் நீங்கள் 50,000 ரூபாய் கேட்டீர்களாம் அவ்வளவு எல்லாம் செய்ய முடியாது என்று மணல் வியாபாரி பேசுவதும் மேலே வரை தகவல் சென்று விட்டது. மேலேயும் நான் சொல்லி இருக்கேன். இப்போதைக்கு பார்த்து செஞ்சி விடுங்க. நாம மாதம் என்ன என்பதை ஒன்றாம் தேதிக்கு மேல் பேசிக்கொள்ளலாம். என உரையாடல் தொடர்கிறது.

இந்த வீடியோ மற்றும் ஆடியோவை மணல் வியாபாரியே ரிலீஸ் செய்திருப்பதாக கூறப்படுகிறது. பேசியபடி பணம் வராததால் மணல் கடத்தல் குறித்து உயர் அதிகாரிகளுக்கு விஏஓவே மற்றொருவர் பெயரில் புகார் அனுப்பியுள்ளதாகவும் இதனை தெரிந்து கொண்ட மணல் வியாபாரி தற்போது லஞ்சம் வாங்கும் வீடியோவை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விஏஓ லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியான நிலையில் அது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *