Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஸ்ரீரங்கம் பழூர் நவக்கிரக கோவிலில் கழிப்பிட வசதியின்றி பக்தர்கள் அவதி

திருச்சி ஸ்ரீரங்கம் வட்டம் பழூர் நவக்கிரக திருக் கோவிலில் பொது கழிப்பிடமின்றி பத்தர்கள் அவதிஅமைச்சரின் சொந்த தொகுதியில் அடிப்படை வசதியின்றி அல்லல் படும் பக்தர்கள்

நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் பகுதியில் உள்ள பழூர் கிராமத்தில் புகழ் பெற்ற பழமை வாய்ந்த பரிகார ஸ்தலமான நவக்கிரக திருக்கோவில் உள்ளது.இக்கோவிலுக்கு தினம் தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

அதே போல் சனிக்கிழமை மற்றும் விசேஷ விழாக்களில் திரளான பக்தர்கள் வருகின்ற நிலையில் இக்கோவிலில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் மற்றும் பக்தர்களுக்கும் அடிப்படை தேவையான கழிப்பிட வசதி செய்து தர வேண்டி கடந்த 29-8-2025 தேதியன்று முதல்வரின் முகவரி பிரிவில் மனு எண்14616003 படி மனு செய்ததற்கு உரிய நடவடிக்கை எதுவும் எடுக்காமல் மிகவும் அலட்சியமான பதிலை செயல் அலுவலர் முதல்வரின் முகவரி பிரிவுக்கு வழங்கி உள்ளார்.

அதாவது இக்கோவிலுக்கு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திருப்பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில்

இந்து சமய அறநிலைத்துறையில் பல கோடி ரூபாய் கணக்கில் நிதி இருந்தும் பக்தர்களுக்கான அடிப்படை வசதியை செய்து கொடுக்காமல்உபயதாரர் யாராவது இலவசமாக செய்து கொடுப்பார்கள் என கையேந்தி நிற்கும் அவல நிலை உள்ளது.

மேலும் அதே மனுவிற்கு உபயதார் இறந்து விட்டார் எனவும் வேறு உபயதாரர் மூலம் பொது கழிப்பிடம் கட்டி தரப்படும் எனவும் மெத்தனமான பதிலை தந்துள்ளார்.

அமைச்சரின் சொந்த தொகுதியில் அடிப்படை வசதியின்றி அல்லல் படும் பக்தர்களுக்ககு

வசதிகளை நிறைவேற்றி தருவாரா என பக்தர்கள் எதிர்பார்ப்பு

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *