தமிழ்நாட்டின் முதல்வரான பிறகு முதல் நிகழ்ச்சியாக திருச்சிக்கு வரும் விஜய்திருச்சி கிழக்கு தொகுதியில் நின்று வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவரும் தமிழ்நாட்டின் வரும் முதல்வருமான விஜய்

திங்கள்கிழமை 1ம் தேதி வருகை தருகிறார்.திங்கள் மாலை 4 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர் பின்னர் சத்திரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள தூய வளனார் கல்லூரியில் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் கலந்து கொள்கிறார் மிக முக்கியமாக தமிழக வெற்றி கழக தலைவராக இருக்கும் பொழுது அதிகமான கூட்டம் வந்தது தற்போது தமிழ்நாட்டின் முதல்வர் பொறுப்பேற்ற பிறகு திருச்சிக்கு முதல் முறையாக வருகை தருவதால் அதிக அளவில் கூட்டம் வரும் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை திருச்சி மாநகர காவல் துறையினர் எடுத்து வருகின்றனர் சத்திரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து மாற்ற ஏற்பாடுகளையும் கலந்து ஆலோசித்து வருகின்றனர் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற கிழக்கு

சட்டமன்ற தொகுதி பதவியை ராஜினாமா செய்த நிலையில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க வருவதாக கட்சி நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர் தமிழக வெற்றிக்கழக டெல்டா மண்டல கண்காணிப்பாளரும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் உப்பா கிருஷ்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav





Comments