துறையூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தேர்தல் வாக்குறுதி கூறியபடி விவசாய கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியாக சென்று வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.கோரிக்கைநிறைவேற்றாவிட்டல் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை திரட்டி சென்னையில் அமர்ந்து போராட்டம் நடத்த உள்ளதாக வழக்கறிஞர் ஈசன் பேச்சு

200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.திருச்சி மாவட்டம், துறையூர் ரவுண்டானா முசிறி பிரிவு ரோட்டு சாலை பகுதியில் திருச்சி மாவட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் செய்து முழக்கங்கள் எழுப்பி கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்தில் பயனளிக்காத கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாக கூறியும்,

தேர்தல் வாக்குறுதியாக கூறிய சிறுகுறு விவசாயிகளுக்கு முழு பயிர்கள் தள்ளுபடி, பெரு விவசாயிகளுக்கு 50% கடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசிற்கு எதிரான கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகி வழக்கறிஞர் ஈசன் தலைமையில் நடைபெற்றது, ஈசன் விவசாய கடன் குறித்தும், விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதி குறித்தும் கண்டன உரையாற்றினார், தொடர்ந்து துறையூர் ரவுண்டானா முசிறி பிரிவு ரோட்டில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக கவன ஈர்ப்பு பேரணியாக சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர், பேரணியில் விவசாயிகள் சங்க கொடி ஏந்தியும் முழக்கங்கள் எழுப்பி சென்றனர், பேரணியில் சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments