Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

எர்த் மூவர்ஸ் கோரிக்கை கூட்டம் – வாடகை, வரி உயர்வுக்கு எதிர்பு

திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நலசங்கம் சார்பில் மாநில அளவிலான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று திருவானைக்காவல் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றதில் தமிழகம் முழுவதும் இருந்து எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நலசங்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் புதிய வாகனங்களின் கடுமையான விலையேற்றம், உதிரிபாகங்கள், இன்சூரன்ஸ் மற்றும் வரிஏற்றத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும்,அரசுவேலைமற்றும்காண்ட்ராக்ட்களில் உள்ளூர்வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும், பழைய கட்டிட கழிவுகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதை நிறுத்த வேண்டும், புதிதாக வாகனம் வாங்குபவர்களை கசக்கிபிழியும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள லைஃப் டாக்ஸ் முறையை ரத்துசெய்துபழைய முறையை அமல்படுத்தவேண்டும், ஒன்று இரண்டு கடன்களை கட்ட முடியாமல் தவிக்கும் உரிமையாளர்களிடமிருந்து வாகனங்களை குண்டர்களைக் கொண்டு பறித்திச்செல்லும் செயலை தடுத்து நிறுத்த வேண்டும், தமிழகம் முழுவதும் மூவர்ஸ் வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 1500 ரூபாய் என்ற வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது இதனையே கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டதுடன், கட்டிடங்களை இடிப்பது தொடர்பாக ஏற்படும் பிரச்சனைகள் எர்த் மூவர்ஸ் வாகனம் மற்றும் ஆபரேட்டர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தமிழக முழுவதும் கிராவல் மண் குவாரிகளை அரசே ஏற்றுநடத்த வேண்டும், அரசியல்வாதிகளுக்கு சாலை ஒப்பந்த பணி, தூர்வாரும் பணி கொடுக்கப்படும் நிலையில் தங்களுக்குவாழ்வாதாரம்பாதிக்கப்படுவதாகவும், டீசல் மற்றும் உதிரிபாகங்கள், இன்சூரன்ஸ் விலைஉயர்வால் தொழில் நலிவடைந்து விட்டதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர், ஜேசிபி உரிமையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்களை பழிவாங்கும் காவல்துறை நடவடிக்கையை தளர்த்தக் கோரி முதல்வர் கவனத்திற்கு கொண்டுசெல்ல இருப்பதாகவும், ஏரி குளங்கள் தூர்வாருவதற்கு 40% கமிஷனில் பொதுப்பணித்துறைக்கு கொடுப்பதற்கு பதிலாக எங்களிடம் கொடுத்தால் முழுவதுமாக கமிஷன் இல்லாமல் உரிய முறையில் தூர்வாரி தரப்படும், எல்லோரும் சேர்ந்து முதல்வராக விஜய் அவர்களை அமர்த்தி மாற்றத்தை தந்திருக்கிறோம், விஜய் அண்ணா நலிவடைந்த எங்களது தொழிலை மீட்டு தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர், முதல்வரை சந்தித்து அனைத்து மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் கோரிக்கை முன் வைக்கப் போவதாகவும், நிறைவேற்றாவிட்டால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கையுடன் தெரிவித்தனர்.

பேட்டி : 1)திரு.சந்திரசேகரன் – தலைவர், கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ்உரிமையாளர் நல சங்கம், 2)திரு.மஞ்சுநாதன் – திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நலச் சங்கத் தலைவர்.

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *