அனுமதி இல்லாமல் மாநகராட்சி பள்ளியில் ரத்ததான முகாம்? – தவெகவுக்கு பொதுமக்கள் கண்டனம்

திருச்சி கருமண்டபம் பகுதியில் தமிழக வெற்றி கழக தலைவரும் தமிழ்நாட்டின் முதல்வருமான விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு, மாநகராட்சி பள்ளி வளாகத்தில் தவெகவினர் ரத்ததான முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.இந்த ரத்ததான முகாம் மாநகராட்சி மற்றும் கல்வித்துறையின் முறையான அனுமதிகளை பெறாமல் நடத்தப்பட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும், அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி வளாகங்களில் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்ற அரசு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், அதனை பின்பற்றாமல் இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது என அவர்கள் தெரிவித்தனர்.

மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பள்ளி வளாகங்களை அரசியல் நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தும் போக்கை கைவிட வேண்டும் என்றும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments