திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 10,000 தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி பூஸ்டர் மருந்துகள் செலுத்தும் பணியை மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் மு.அன்பழகன் அவர்கள் இன்று (22.06.2026 ) தொடங்கி வைத்தார்கள் .

இந்நிகழ்சியில் ஆணையர் திரு. வீர் பிரதாப் சிங் இ.ஆ.ப., துணை மேயர் ஜி. திவ்யா ,நகர் நல அலுவலர் கார்த்திகேயன் மண்டல தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

மாண்புமிகு மேயர் அவர்கள் தெரிவித்ததாவது ,திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பரோபரியாக சுற்றி தெரியும் தெரு நாய்களின் எண்ணிக்கை கணக்கெடுப்பு பணிகள்ஜனவரி-2025ல்மேற்கொள்ளப்பட்து. கணக்கெடுப்பு அறிக்கையில், கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 20571 தெருநாய்கள் மற்றும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படாத 23196 நாய்கள் தெருநாய்கள் சுற்றி திரிவதாகவும் ஆக மொத்தம் 43767 தெருநாய்கள் இம்மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரிவதாக அறிக்கை பெறப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பு அறிக்கை பெறப்பட்ட பிறகு 2025 ஆம் ஆண்டில் 8698 தெரு நாய்களுக்கும் 2026 நடப்பு ஆண்டில் இதுவரை 3054 தெருநாய்களுக்கும் கருத்தடைஅறுவை சிகிச்சை செய்து ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதமுள்ள 11444 தெருநாய்களுக்கும் கருத்தடைஅறுவை சிகிச்சை செய்து ரேபீஸ் தடுப்பூசி போடும் பணிகள் நடப்பு ஆண்டில் முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் ,தெருநாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி பூஸ்டர் மருந்துகள் கடந்த ஆண்டில் 5000 தெருநாய்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 10000 தெருநாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி பூஸ்டர் மருந்துகள் செலுத்தும் பணிகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments